• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் குவெய் யாங் நகரிலுள்ள கன்பிஃசியஸ் கல்விக்கூடம்
  2014-07-29 08:45:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன Ren Min பல்கலைக்கழகத்தின் கம்ஃபிசியஸ் ஆய்வகத்தின் தலைவர் Zhang Li Wen பேசுகையில், இந்த கல்விக்கூடம் அசாதாரணமானது. பழமை மீட்புக்குப் பதிலாக, இது மறுமலர்ச்சியடைந்துள்ளது. மக்கள் இக்கூடத்தில் நுழைந்ததும், அச்சமூட்டுகின்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். கவ்வி நிறுவனமாக, இக்கூடத்தின் பங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய பாரம்பரியப் பண்பாட்டுக் கையேற்றல் மற்றும் புதுமை முறைமையும், வெளிநாட்டு பரவல் முறைமையும் இக்கல்விக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, பாரம்பரியப் பண்பாட்டின் சூழல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பீக்கிங் பல்கலைக்கழகம், சிங்குவா பல்கலைக்கழகம், சீன Ren Min பல்கலைக்கழகம், நான் ஜிங் பல்கலைக்கழகம், ச்செ சியாங் பல்கலைக்கழகம், ஃபு தன் பல்கலைக்கழகம், வூ ஹான் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்கள், கம்ஃபிசியஸ் கல்விக்கூடத்துடன் உடன்படிக்கையை உருவாக்கி, இக்கல்வி்க்கூடத்தில் Sinology ஆய்வுத் தளத்தை நிறுவியுள்ளன.

கம்ஃபிசியஸ் கல்விக்கூடத்தின் சின்னமுடைய பண்பாட்டு கூட்டிணைப்பு உருவாக்க குவெய் சோ மாநில அரசு பாடுபட்டு வருகிறது. கம்ஃபிசியஸ் கல்விக்கூடப் பதிப்பகம், இதழ் நிறுவனம், இணையத் தளம், கலைக் குழு அடுத்தடுத்து நிறுவப்பட்டுள்ளன. தவிர, கம்ஃபிசியஸ் நிதியம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிதியம் கம்ஃபிசியஸ் ஆய்வுக்கும், ஆய்வு சாதனைகள் வெளியீட்டுக்கும் நிதி உதவி வழங்குகிறது. இது வரை இந்நிதியம் 7 கோடி யுவானை சேகரித்துள்ளது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040