• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் குவெய் யாங் நகரிலுள்ள கன்பிஃசியஸ் கல்விக்கூடம்
  2014-07-29 08:45:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சின் மின் மண்டபத்தில், சீனப் பாரம்பரிய பண்பாடுகளிலுள்ள அம்சமாக, மூத்த மரபினரின் மீதான அன்புணர்வு பற்றிய கதை சொல்லுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளூர் பிரதேசத்தில் புகழ் பெற்ற கதைச் சொல்லி, கன்பிஃசியஸ் என்ற அனாலெக்ட்ஸ் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து, மூத்த மரபினரின் மீதான அன்புணர்வை தத்ரூபமாக விவரித்தனர். கதையோடு, மக்களின் சிரிப்பொலியும் அழுகை ஒலியும் கேட்கலாம். சீனப் பாரம்பரியப் பண்பாட்டின் தனிச்சிறப்பு மிக்க ஈர்ப்பாற்றல், மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

குவெய் யாங் கம்ஃபிசியஸ் கல்விக்கூடத்தின் மொத்த கட்டிட நிலப்பரப்பு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயி்ரம் சதுர மீட்டர் ஆகும். முதலாவது கட்டுமானப் பகுதி, கற்பித்தல் பகுதியாகும். இப்பகுதி கட்டிமுடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான பாரம்பரியப் பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர, சிற்பம், காட்சிப் பலகை, மின்னனு தொடு திரை உள்ளிட்ட பல்லூடகங்கள் மூலம், சீனாவின் பல்வேறு வம்சக்கால கன்ஃபிசியஸின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்களும, அவர்களின் படைப்புகளும் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்ட சீனத் தேசப் பண்பாட்டுச் சர்வதேச ஆய்வு மண்டலம் இவ்வாண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும். இம்ம்ண்டலத்தில், 15 கற்பித்தல் கட்டிடங்களும், எண்ணியல் நூலகம், கல்வியியல் விரிவுரையடங்கு முதலியவை இருக்கின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040