• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் குவெய் யாங் நகரிலுள்ள கன்பிஃசியஸ் கல்விக்கூடம்
  2014-07-29 08:45:25  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, வார இறுதி நாட்களில், தலைசிறந்த பாரம்பரியப் பண்பாட்டுப் பிரச்சாரங்கள் இக்கல்வி கூடத்தில் வழங்கப்படுகின்றன. Du Wei Ming, Wang Meng, Zhang Li Wen, Yu Dan உள்ளிட்ட புகழ் பெற்ற அறிஞர்கள் அடுத்தடுத்து இக்கல்வி கூடத்தில் பிரச்சாரங்கள் வழங்கினர். இது வரை சுமார் 160 பிரச்சாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 ஆயிரம் மக்கள் இப்பிரச்சாரங்களைக் கேட்டீருக்கின்றனர்.

அதே வேளையில், கம்ஃபிசியஸ் கல்விக்கூடம், இளைஞர்கள் மீதான பாரம்பரியப் பண்பாட்டுக் கல்வியை வலுப்படுத்தியுள்ளது. வாரதோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, சீனப் பாரம்பரியப் பண்பாட்டு நூல்களைப் படிப்பது, நேர்த்தியான கையெழுத்து படைப்புகளை எழுதுவதைப் பயிற்சி செய்வது, பண்பான நடத்தை மற்றும் இசை விழா நடத்துவது ஆகிய நடவடிக்கைகளில் பத்தாயிரம் மாணவர்கள் பங்கெடுத்துள்ளனர். 2013ஆம் ஆண்டு முதல், கம்ஃபிசியஸ் கல்விக்கூடம், first writing சடங்கு, வயதுவந்தோர் சடங்கு மற்றும் சீனத் தேசத்தின் பாரம்பரிய திருமண விழா ஆகியவற்றை நடத்தியுள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040