4000ஆம் ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் பத்தகங்களில் நடனம் பற்றிய பதிவு காணப்பட்டுள்ளது. இந்தியாவின் கவிதை இராமாயணத்தில் நடனம் பற்றிய பதிவுகள் மேலும் அதிகம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பரத்துவமுனி இயற்றிய நதியசஸ்த்ரா எனும் புத்தகம், உலகில் சிறப்பாக நடனத்தை அறிமுகப்படுத்தும் புத்தகமாக இருக்கிறது. இந்தியாவின் நடன வகைகள் 180க்கு மேலாகும். நடனக் கலைஞர்களுள் தத்தமது நடனத்தில் சிறப்பு பெற்று உள்ளனர்.
ஹாரி ஒம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞர். 2003ஆம் ஆண்டு, 25வயதான அவர் சீனாவின் ஹாங்காங்குக்குச் சென்று, முதன்முதலாக குச்சிப்புடியை அங்குக் கொண்டு சென்றுள்ளார். ஹாங்காங்கில் இந்தியாவின் பாரம்பரிய நடனத்தைப் பரவல் செய்யும் முதல்நபராகவும் அவர் மாறியுள்ளார்.
குச்சிப்புடி என்பது இந்தியாவின் 6 பாரம்பரிய நடன வகைகளில் ஒன்றாகும். சுமார் கி.பி. முன்னூறாம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இது உருவாகியுள்ளது. முன்பு, இத்தகைய நடனம் கோயிலின் திருவிழா காலங்களில் மட்டும் ஆடப்படும். இப்போது, இவ்வகை நடனம் உலகளாவிய புகழ்பெற்ற இந்திய நடன வகையாக மாறியுள்ளது.
பல இந்தியக் கலைஞர்களைப் போல, ஹாரியின் குடும்பமும் கலைஞர் குடும்பமாகும். அவரிம் தாய் புகழ்பெற்ற பாடகர். அவரின் குடும்பத்தில் வயலின் கலைஞர், வீணா கலைஞர் மற்றும் நடனக் கலைஞர்கள் உள்ளனர். இத்தகைய குடும்பத்தில் வாழ்ந்த ஹாரி 3வது வயது முதல் குச்சிப்புடி நடனத்தைக் கற்றுக்கொண்டு வந்துள்ளார். 12 ஆண்டுகளில் அவர் பல முறை புகழ்பெற்ற கலைஞர்களுடன் நிகழ்ச்சிகளை நிகழ்தியுள்ளார். இந்தியப் பண்பாட்டு மூல வளம் மற்றும் பயிற்சி மையம் ர்வழங்கிய கல்வி உதவித்தொகையையும் பல நடன விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
2003ஆம் ஆண்டு, மாணவர்களின் அழைப்புக்கு இணங்க, அவர் தனியாக ஹாங்காங்க்குச் குச்சிப்புடியைக் கற்பிக்கச் சென்றுள்ளார். சீனர் இந்தியாவின் பாரம்பரிய நடனம் மற்றும் பண்பாட்டை அறிந்துகொள்ளவில்லை ஆதலால், துவக்கத்தில் அவரின் நடன வகுப்பில் 4,5 மாணவர்கள் மட்டும் இருந்தனர். மேலும் உணவு மற்றும் வாழ்வு வகையின் வேறுப்பாட்டால், துவக்கத்தில் ஹாங்காங்கில் இருந்த ஹாரி வாழ்க்கையில் பணியில் அதிக இன்னல்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது.