நான் முதல் முறையாக மாணவர்களை இந்தியாவுக்குக் கொண்டு சென்று நடித்தபோது, சீனர் குச்சிப்புடியை இப்படி சிறப்பாக ஆடுகின்றனர் என்று பார்வையாளர்கள் பெரிதாக ஆச்சரியப்பட்டுள்ளனர். ஏனென்றால், நடனம் மட்டுமல்ல, பாடலையும் மாணவர்களுக்குக் கற்பிக்கிறேன். ஒவ்வொரு நடனச் செயலின் பொருளையும் அவர்கள் புரிந்துகொள்ள கோருகிறேன். அந்த நிகழ்ச்சி உள்ளூர் மக்களின் நினைவில் ஆழமாக பதிவு செய்துள்ளது. அதனால், இப்போது ஆண்டுதோறும் அவர்கள் எங்களை இந்தியாவில் நடனம் ஆட அழைப்பார்கள்.
இந்தியாவின் ஆழமான நடனப் பண்பாட்டை மாணவர்கள் பன்முகங்களிலும் அறிந்துகொள்ளும் வகையில், ஹாரி வேறு இந்திய நடனக் கலைஞர்களை ஹாங்காங்குக்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றி, மாணவர்களுடன் பரிமாற்றம் மேற்கொள்கின்றார்கள்.
ஒவ்வொரு ஆசிரியரும் தனிசிறப்பு பெற்று உள்ளார். நான் வேறு ஆசிரியர்களை ஹாங்காங்குக்கு அழைத்தது மூலம், நான் கற்பிக்க முடியாததை மாணவர்கள் அந்த ஆசிரியர்களிடம் கற்றுகொள்ளலாம் என்று ஹாரி சொன்னார்.