பண்டை காலத்தில் இந்தியர்கள் நடனம் மூலம் கடவுளுடன் தொடர்பு மேற்கொண்டனர். அதனால், பாரம்பரிய நடனங்களை ஆடும்போது, பெரிய எழுச்சி ஆற்றல் அடைவேன். மிகவும் அனுபவிப்பேன். அதேவேளை, இந்தியப் பண்பாடு என்னை ஈர்ப்பது, மக்களுடன் தொடர்பு மேற்கொளும் போது அல்லது கடவுளுடன் மேற்கொள்ளும்போது, என் மனதிலுள்ள உணர்ச்சி முழுமையாக வெளிப்படுத்தலாம். எனது உணர்வு நடனம் மூலம் பிறருடன் தொடர்பு மேற்கொள்ளலாம் என்று லோ சி ஃபென் கருதினார்.
1954ஆம் ஆண்டு, சீனாவின் நடனக் கலைஞர் சாங் ஜியூன் இந்தியாவில் பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டார். இந்தியப் பாரம்பரிய நடனத்தைக் கற்றுக்கொள்ளும் முதல் சீனராக மாறியுள்ளார். 1957ஆம் ஆண்டு, இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர் பாண்டிட் உதய் ஷான்கர் சீனாவில் பயணம் மேற்கொண்டார். சீன-இந்திய நடனப் பரிமாற்றத்தின் புதிய அத்தியாயம் திறந்து வைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு சீன-இந்திய நட்பு பரிமாற்ற ஆண்டாகும். பல்வேறு நடவடிக்கைகளும் நடனங்களும் இக்கொண்டாட்ட நடவடிக்கைகளில் இடம்பெறும் பரிமாற்றத்தைத் தூண்டுவதில் நடனம் சிறப்பு மேம்பாடு உள்ளது என்று ஹாரி கருதுகின்றார்.
ஒவ்வொரு முறை நான் மாணவர்களை இந்தியாவுக்குக் அழைத்து செல்லும் போது, இந்திய மக்கள் சீனப் பண்பாட்டை மேலும் அறிந்துகொள்ள விரும்புகின்றனர். சீன மாணவர்களும் இந்தியப் பண்பாட்டை அறிந்துக்கொள்ள விரும்புகின்றனர். நான் அவர்களைக் கோயிலுக்குக் அழைத்துச் சென்று, உள்ளூர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் தொடர்பு மேற்கொள்கின்றோம். நடனத்திற்காக மட்டும் ஹாங்காங்கிற்கு வந்தேன். ஆனால், பண்பாட்டுப் பரிமாற்றம் இரு நாடுகளின் மாணவர்களுக்குமிடையில் மேற்கொண்டு வருகிறது. இது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஹாரி கூறினார்.