உண்மையில் ஹாங்காங்கில் வந்த முதல் 6 திங்களில், நாள்தோறும் இந்தியாவுக்குத் திரும்ப விரும்பினேன். நான் தனியாக இங்கே வந்து, இந்திய சாப்பாட்டை வாங்க எங்கே செல்ல வேண்டும் என்று தெரியாது. ஆனால் இங்கே வந்து இந்திய நடனத்தைக் கற்பிக்கும் முதல் நபர் நானே. எப்படி இருந்தாலும் கைவிடக் கூடாது என்று உறுதியாய் இருந்தேன். இந்திய விழாவின் போது நிகழ்ச்சிகளில் நடிக்கின்றேன். பல நண்பர்களுடன் பழகினேன். படிப்படியாக இவ்விடத்தை விரும்பியுள்ளேன். இங்குள்ள மூலிகை தேநீரைக் குடிப்பேன். தோஃபூ மற்றும் காய்கறியைச் சாப்பிடுவேன். வாழ்க்கை வாழ ஹாங்காங் நல்ல இடம். இங்கு அதிக வாய்ப்புகளும் இருக்கின்றன என்று ஹாரி கூறினார்.
இந்தியாவின் பாரம்பரிய நடனத்திற்கும் மதத்திற்கும் ஆழமான தொடர்பு உள்ளது. சீன மாணவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய நடனத்தை ஏற்றுக்கொள்வது எளிதானதல்ல. ஆனால், பாலிவுட் திரைப்படங்கள் சீனாவில் மிகவும் புகழ்பெற்றன. அவை மேன்மேலும் அதிகமான மாணவர்களை ஈர்க்கின்றன. அதனால், ஹாரியின் ஒவ்வொரு வகுப்பிலும் 40 முதல் 60 வரையான மாணவர்கள் உள்ளனர். மேலும், குச்சிப்புடி நடனம் பற்றிய சொற்பொழிவு அவர் ஆற்றி அதிக ஆர்வமுடையவர்களை ஈர்த்துள்ளார். படிப்படியாக ஹாரி அவரது பாரம்பரிய நடன வகுப்பை மீண்டும் துவங்கினார்.
மாணவர்கள் நடனத்தை அனுபவிக்கிறார்களா இல்லையா என்பதில் ஆசிரியர் இந்த நடனத்தை எப்படி ஆடுகிறார் என்பது மிகவும் முக்கியம். நடனத்தின் உண்மையான அழகை மக்கள் அறிந்துகொள்ளச் செய்வது எப்படி?நடனத்தில் மொழி மற்றும் பண்பாட்டின் தடை இல்லை. நடனத்தின் அழகை அறிந்துகொண்டால் அதனை அனுபவிப்பர் என்று ஹாரி கூறினார்.
சில நேரத்திற்குப் பிறகு, மாணவர்களின் மேடையில் நிகழ்ச்சிகளை ஆடலாம் என்று ஹாரி நினைத்தார். அவர் மாணவர்களைக் கொண்டு வந்து இந்தியாவில் ஆடினார்கள். சீனர் இந்தியாவின் பாரம்பரிய நடனத்தை நடிப்பதை இந்திய மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.