• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'தா யுன் ஹெ' என அழைக்கப்படும் சீனப் பெரும் கால்வாய் திட்டப்பணி
  2014-08-29 11:06:56  cri எழுத்தின் அளவு:  A A A   

 

38வது உலக மரபுச் செல்வ மாநாட்டில், சீனாவின் தா யுன் ஹ, உலக மரபுச் செல்வப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. சீனத் தேசியப் பண்பாட்டு மரபுச் செல்வப் பணியகத்தின் துணை தலைவர் துங் மிங் காங் பேசுகையில், தா யுன் ஹெ உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், சீனாவில் தா யுன் ஹே எனும் பெரும் கால்வாயின் நெடுகிலுள்ள 8 மாநிலங்கள் மற்றும் மாநகர்களைச் சேர்ந்த 17 கோடி மக்களிடையே உலக மரபுச் செல்வப் பாதுகாப்புக் கருத்து பரந்துபட்ட அளவில் பரவலாகி, மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

தா யுன் ஹெ, உலகளவில் மிக நீண்ட, மிக தொண்மை வாய்ந்த செயற்கை நீர்வழி ஆகும். தொழிற்துறை புரட்சிக்கு முன் அளவில் மிக பெரிய, மிக பரந்துபட்ட குடிமுறை பொறியியல் வேலைகளாகும். சீனாவின் தென் பகுதிக்கும் வட பகுதிக்குமிடையே சரக்குகள் ஏற்றியிறக்கலையும், உரிமைப் பிரதேச நிர்வாகத்தையும் தா யுன் ஹே விரைவுபடுத்தியுள்ளது. சீன மக்களின் உன்னத விவேகம், மன உறுதி மற்றும் துணிவை தா யுன் ஹே வெளிப்படுத்தியுள்ளது. நீர் சேமிப்பு தொழில் நுட்பம் மற்றும் நிர்வாக ஆற்றல் ரீதியில் கீழை நாட்டு நாகரீகத்தின் தலைசிறந்த சாதனைகளையும் இது வெளிப்படுத்தியுள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040