• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'தா யுன் ஹெ' என அழைக்கப்படும் சீனப் பெரும் கால்வாய் திட்டப்பணி
  2014-08-29 11:06:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பண்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட "தா யுன் ஹே மரபுச் செல்வப் பாதுகாப்பு நிர்வாக வழிமுறை" என்ற ஆவணம் 2012ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. நீர் சேமிப்பு, போக்குவரத்து, தொல் பொருள் ஆகிய துறைகளில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகள் இந்த ஆவணத்தில் இடம்பெறுகின்றன. சீனாவில் தா யுன் ஹே நெடுகிலுள்ள 35 நகரங்கள், "தா யுன் ஹே மரபுச் செல்வங்களை கூட்டாக பாதுகாக்கும் உடன்படிக்கையில்" கையொப்பமிட்டு, இக்கால்வாய் மரபுச் செல்வத்தைப் பாதுகாக்க கூட்டாக பாடுபடுவதென வாக்குறுதி அளித்துள்ளன.

தா யுன் ஹே கட்டியமைக்கப்பட்டது, அரசியல், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட துறைகளிலான தேவைகளை நிறைவ செய்வதற்காகும். தற்போது, தா யுன் ஹே, கீழை நாட்டு விவேகத்தின் சின்னமாக மாறியுள்ளது. தா யுன் ஹே, நீர் சேமிப்பு தொழில் நுட்பம், பண்பாட்டு உள்ளடக்கம் உள்ளிட்ட துறைகளில் தனிச்சிறப்பு வாய்ந்த மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்று நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

பொருளாதார மதிப்பு ரீதியில், "உலக நிலை சுற்றுலா இலக்காக உருவாக்குவது என்ற நோக்கம் தொடர்பாக, ஹாங் சோ நகருக்கு ஊடாக செல்லும் தா யுன் ஹே பகுதியில், நீர் வழி சுற்றுலா வழங்கப்பட்டுள்ளது. முந்தைய புள்ளி விபரங்களின்படி, இச்சுற்றுலா நெறி பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை, 2003ஆம் ஆண்டில் இருந்த 6819யிலிருந்து, 2009ஆம் ஆண்டில் இருந்த 59 ஆயிரத்து 93க்கு அதிகரித்துள்ளது. சுற்றுலா வருமானம் ஆண்டுக்கு சுமார் 162 விழுக்காடு அதிகரித்துள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040