• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்: கைகோர்த்து, மறுமலர்ச்சி கனவைத் தேடும்
  2014-09-19 01:24:06  cri எழுத்தின் அளவு:  A A A   

 

அனைவருக்கும் வணக்கம்.

இந்திய உலக விவகார குழுவின் அழைப்பை ஏற்று இங்கு வந்து உங்களைச் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. முதலில், சீன அரசு மற்றும் மக்களின் சார்பிலும், என் சார்பிலும் இந்திய மக்களுக்கு அன்பான வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். நீண்டகாலமாக சீன-இந்திய நட்பு ஒத்துழைப்பில் பங்காற்றியுள்ள பிரமுகர்களுக்கு உளமார்ந்த மதிப்புக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

1997ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளேன். என் மனதில் இந்நாடு ஆழப்பதிந்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறேன். இந்திய மக்கள் பெற்றுள்ள மாபெரும் வளர்ச்சி சாதனைகளையும் கண்கூடாக பார்த்து, சுறுசுறுப்பான இந்திய மக்களின் எழுச்சியை தானாகவே உணர்ந்துகொள்கிறேன். இன்றைய இந்தியாவின் வளர்ச்சி, நம்பமுடியாது. இந்தியா, அற்புதமான வண்ணமான நாடாகும். இங்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பை பண்டைய நாகரிகம் தோன்றியது. இந்தியா, வரலாற்று இடைவழியைப் போன்றது. பிரகாசமான நேற்று, வியப்பான இன்று, எதிர்ப்பார்ப்பு கொண்ட நாளை ஆகியவை உடையன.

தலைமையமைச்சர் மோடியின் தலைமையுடன், இந்திய மக்கள் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டு வருகின்றனர். சர்வதேச சமூகம் மேலும் எதிர்ப்பார்க்கின்றது. இந்தப் பயணக்காலத்தில், தலைமையமைச்சர் மோடியுடன் இரு தரப்புறவு, பொது ஆர்வம் கொண்ட முக்கிய பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றி முழுமையாக கருத்துக்களைப் பரிமாறி, ஒத்தக்கருத்தை உருவாக்கியுள்ளோம். இரு நாட்டு செயற்நோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவின் உள்ளடக்கங்களை அதிகரிப்பதாக ஒருமனதாக ஒப்புதல் கொண்டுள்ளோம். சீனாவின் முன்னாள் தலைவர் திரு.தேன்சியேளபீங் பேசுகையில், சீனாவும் இந்தியாவும் வளர்ச்சியடைந்த பிறகு, உண்மையான ஆசிய நூற்றாண்டு காலம் வரும் என்று குறிப்பிட்டார். திரு.நேரு பேசுகையில், இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்பு கொள்வது, ஆசியாவிலும் ஏன் உலகளவிலும் கூட பெரிய விஷயமாகும் என்று தெரிவித்துள்ளார். ஆசியாவில் மிக பெரிய இரு நாடுகளான, சீனாவும் இந்தியாவும் அமைதியை பேணிக்காத்து, ஆசிய செழுமையை நனவாக்கம் செய்ய பொறுப்பேற்கின்றன.

நண்பர்களாக, சீன மற்றும் இந்திய மக்களிடை நீண்டகால நட்புறவு கொள்கின்றது. "சீனாவும் இந்தியாவும், மனம் ஒருமித்து, ஒன்றுக்கு ஒன்று உதவியளிக்கும் சகக் கூட்டாளிகளாகும்" என்று காந்தி கூறியுள்ளார். இவ்விரு நாடுகள் இரண்டு உடல்களில் ஒரே ஆன்மாவைக் கொண்டுள்ளதாக தலைமையமைச்சர் மோடி என்னிடம் குறிப்பிட்டார்.

அவர்களின் கூற்றுகளில், சீன மற்றும் இந்திய நாகரிகங்களிடையே உள்ளார்ந்த தொடர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

எழுத்துப் பதிவின் படி, சீன-இந்திய தொடர்பு வரலாறு, 2000க்கும் கூடுதலான ஆண்டுகளாகும். புத்த மதம் மேலை நாடுகளில் வளர்ச்சியடைந்து, கிழக்கு நாடுகளில் பரவியது என்பது, சீன மற்றும் இந்திய மக்கள் தொடர்பு வரலாற்றில் மிகவும் முக்கியமான புத்தமத பரிமாற்றம் பற்றிக் கூறுகிறது. கி.பி.67ஆம் ஆண்டில் பண்டை இந்தியாவின் மூத்த மதக்குருமார் இருவர் சீனாவின் லோயாங் நகரத்துக்கு வந்து, மதமறையை மொழிபெயர்த்து பத்திரிகைகளை எழுதி வெளியிட்டனர். அவர்கள் மொழி பெயர்த்துள்ள 《42 பிரிவுகளான மதமறை》 சீனப் புத்தமத வரலாற்றில் மிக உன்னதான மதமறையாகும். யுவான்ச்சுவாங் மேலை நாடுகளில் பயணம் மேற்கொண்டு, இந்தியப்பண்பாட்டை சீனாவுக்குக் கொண்டு வந்தார். சீனாவின் கப்பல் துறை அறிஞர் ச்செங்ஹே ஏழு முறையாக கடலில் நெடுந்தூரப் பயணத்தையும் இந்தியாவில் ஆறு முறை பயணத்தையும் மேற்கொண்டு, சீனாவின் நட்பைக் கொண்டுச் சென்றார். இந்தியாவின் ஆடல் பாடல், வானியல், நாள்காட்டி, இலக்கியம், கட்டடம், சர்க்கரைத் தயாரிப்பு ஆகியவை சீனாவில் நுழைந்து பரவின. சீனாவின் காகிதத் தயாரிப்பு, பட்டு, பீங்கான், தேயிலை, இசை முதலியவை இ்ந்தியாவுக்கு பரவியுள்ளன. இவை, இரு நாட்டு மக்கள் பண்டைக்காலம் தொடங்கி தொடர்பு கொண்டு பரஸ்பர அனுபவங்களைப் பயன்படுத்தும் வரலாறாக பதிவாகிவுள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040