• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்: கைகோர்த்து, மறுமலர்ச்சி கனவைத் தேடும்
  2014-09-19 01:24:06  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மைக்காலத்தில், சீன மற்றும் இந்திய மக்கள், தேசிய சுதந்திரத்தையும் விடுதலையையும் முயலும் போராட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, ஆசியாவின் விழிப்புணர்வை விரைவுபடுத்தியுள்ளனர். இந்தியா, சீனாவின் அபினி எதிர்ப்பு போராட்டத்துக்கும், சீனா, இந்தியாவின் சுதந்திர இயக்கத்துக்கும் ஊக்கமளித்துள்ளன. சீன மக்களின், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் காலத்தில் சீனாவுக்கான இந்திய மருத்துவ அணியின் உதவிகள் சீன மக்களை மனமுருகச் செய்துள்ளன.

1950ஆம் ஆண்டில் சீனாவும் இந்தியாவும் தூதாண்மை உறவை நிறுவி, இருநாட்டுறவின் புதிய பக்கத்தைத் திறந்தன. புதிய சீனாவை மிகவும் முன்னதாக ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளில் இந்தியா ஒன்றாகும். ஐ.நாவில் சீனாவின் சட்டப்பூர்வ தகுநிலையை மீட்க வேண்டும் என்பதை முன்வைத்த முதல் நாடும் இந்தியா தான். சீனா, இந்தியா, மியன்மர் ஆகியவை "பஞ்ச சீல கோட்பாடுகளைக்" கூட்டாக முன்வைத்து, சர்வதேச உறவு வரலாற்றில் மாபெரும் சாதனையை உருவாக்கியுள்ளன. இது, கிழக்கு அறிவு, நவீன நாகரிகத்துக்கு தலைச்சிறந்த பங்களிப்பாகும்.

புதிய நூற்றாண்டில் நுழைந்த பிறகு, சீனாவும் இந்தியாவும் அமைதியான செழுமையான நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவை நிறுவியுள்ளன. இரு நாட்டுறவு வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இரு தரப்பு வர்த்தகத்தொகை, 20 மடங்கிற்கு கூடுதலாக அதிகரித்துள்ளது. மனிதர் பரிமாற்றம் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இரு நாட்டு தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் அளவும் ஆழமும் முன்கண்டிராத அளவில் விரிவாகியுள்ளன. இரு நாட்டுறவு புதிய வரலாற்றுத் துவக்கத்தில் நிற்கிறது என்று கூறலாம்.

பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே,

தற்போதைய யுகத்தில் சர்வதேச நிலைமை முன்கண்டிராத ஆழமான திருத்தங்கள் ஏற்பட்டன. இதில் ஒரு முக்கிய போக்கு, உலக நிலைமையில் ஆசியாவின் தகுநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சீனாவும் இந்தியாவும் உலக பல்துருவமயமாக்க முன்னேற்றப்போக்கில் இரு முக்கிய ஆற்றல்களாகவும், ஆசிய மற்றும் உலகப்பொருளாதார அதிகரிப்பைத் தூண்டும் வலிமை மிக்க ஆற்றலாகவும் மீண்டும் முக்கிய பங்காற்றும். சீன-இந்திய உறவு, இருதரப்புறவு அளவைத் தாண்டி, பரந்த பிரதேச மற்றும் உலக செல்வாக்கைக் கொண்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் கைகோர்த்து ஒத்துழைப்பது, இரு நாடுகளுக்கும், ஆசியாவுக்கும் உலகிற்கும் நன்மை தரும்.

இதனால், சீனாவும் இந்தியாவும் மேலும் நெருக்கமான வளர்ச்சி கூட்டாளியாகவும், அதிகரிப்பை விரைவுபடுத்தும் கூட்டாளியாகவும், செயற்நோக்கு ஒருங்கிணைப்பு கூட்டாளியாகவும் மாற வேண்டும் என்று கருதுகின்றேன்.

முதலாவது, சீனாவும் இந்தியாவும், மேலும் நெருக்கமான வளர்ச்சி கூட்டாளியாக மாறி, தேசிய மறுமலர்ச்சியை கூட்டாக நனவாக்க வேண்டும். வளர்ச்சி என்பது, இரு நாடுகளின் மிக பெரிய பொது இலக்காகும். தமது நாட்டு மக்களின் வாழ்வு மேலும் சீராகவும் அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பது, இரு நாடுகளின் உடனடி பணியாகும். வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அனுபவங்களைப் பகிர்ந்து, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இருநாடுகளின் அமைதி வளர்ச்சி, ஒத்துழைப்பு வளர்ச்சி மற்றும் சகிப்பு வளர்ச்சியை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும்.

சீனா, உலக தொழிற்சாலையாக அழைக்கப்பட்டது. இந்தியா, உலக அலுவலகமாக அழைக்கப்பட்டது. இரு தரப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பரஸ்பரம் ஒன்றில் இல்லாததை மற்றது நிவர்த்தி செய்ய வேண்டும். சீனாவின் மேற்கு நோக்கும் திறப்புக்கொள்கையை, இந்தியாவின் கிழக்கை நோக்கும் வளர்ச்சிக்கொள்கையுடன் இணைப்பதை விரைவுபடுத்தி, உலகில் போட்டியாற்றல் மிக்க உற்பத்தி தளம், ஈர்ப்பாற்றல் மிகுந்த நுகர்வு சந்தை, செல்வாக்கு ஆற்றலைக் கொண்ட அதிகரிப்பு உந்து சக்தி ஆகியவற்றை உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, முதலீடு மற்றும் நாணயத்துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பின் பன்முக வளர்ச்சியை நனவாக்க பாடுபடுவோம்.

இரு நாட்டுறவு, நாட்டுப்புற நாகரிகங்களுடன் தொடர்புடயது. சீனாவின் தேய்ஜி மற்றும் இந்தியாவின் யோகா, சீனாவின் பாரம்பரிய மருத்துவம் மற்றும் இந்தியாவின் ஆயுர்வேதம் ஆகியவை ஒரேமாதிரியாக இருக்கின்றன. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இரு நாட்டு மக்களின் வாழ்வுத் தத்துவங்களும் ஒற்றுமையாகவுள்ளன. இப்பயணத்தில் சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டம் வகுக்கப்பட்டது. இரு நாட்டு பண்டைக்கால மானிடப் பண்பாட்டை வெளிக்கொணர்ந்து, சீன-இந்திய நாகரிகத் தொடர்பின் நிலைமையை மீண்டும் காட்சிக்கு வைக்கும். இளைஞர், பண்பாடு, கல்வி, சுற்றுலா, மதம், ஊடகம், ஒலிபரப்பு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, உள்ளூர் நகரங்கள் ஆகிய துறைகளில் தொடர்பையும் ஒத்துழைப்பையும் விரிவாக்குவதாக இரு தரப்பும் ஒப்புதல் கொண்டுள்ளன. இந்திய மதநம்பிக்கையாளர்கள் சீனாவின் திபெத்திற்குச் சென்று புனித பயணம் மேற்கொள்வதற்கு வசதி அளிக்கும் வகையில், நேதூலா மலை வழியான புனித பயண வழியை புதிதாக திறக்க சீனா முடிவு செய்துள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040