• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்: கைகோர்த்து, மறுமலர்ச்சி கனவைத் தேடும்
  2014-09-19 01:24:06  cri எழுத்தின் அளவு:  A A A   

பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே,

90 ஆண்டுகளுக்கு முன், சீன மக்களுக்கு மிகவும் பிடிக்கின்ற இந்திய மாபெரும் கவிஞர் ரவிந்தரநாத் தாகூர், சீன வருகையில் அதிக வரவேற்பு பெற்றார். சீனாவிற்குள் நுழைந்தவுடன், "சொந்த ஊருக்குத் திரும்பிய உணர்வு" அவருக்கு வந்துள்ளது என்றார். சீனாவை விட்டுச் சென்ற போது, அவர் சொன்னார் "எனது மனம் சீனாவில் இருக்கும்"என்றார்.

தற்போது சீன மற்றும் இளைஞர் பிரதிநிதிகளும் இங்கு இருக்கின்றனர். இளைஞர்கள், இரு நாடுகளின் எதிர்காலம் தான். அவர்கள், ஆசியா மற்றும் உலகத்தின் எதிர்பார்ப்பை ஏற்கின்றனர். இளைஞர்கள், நடைமுறையிலிருந்து பல்வகை உணர்வுகளைப் பெறுகின்றனர். அவர்கள் கனவில் ஊன்றி நின்று பாடுபடுகின்றனர். இளைஞர்கள் இரு நாடுகளின் பழங்கால நாகரிகத்திலிருந்து அறிவுத்திறமையைப் பெற்று முன்னேறி வருகின்றனர் என்று நம்புகிறேன். பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இளமை மனம் மூலம் எதிர் தரப்பு நாடுகளை உணர்ந்து கொண்டு கூட்டாக எதிர்காலத்தை உருவாக்குங்கள்.

பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே,

சீன பழமொழி ஒன்று சொல்கிறது, தன்னை வலிமையாக்க விரும்பினால், முதலில் பிறரை வலிமையாக்க வேண்டும். தன்னை செழுமைபடுத்த விரும்பினால், பிறரை முதலில் செழுமைபடுத்த வேண்டும். சீனா, சொந்த வளர்ச்சியை தேடும் அதே வேளை, இந்தியா செழுமைபட்டு வலிமையாக மாறுவதையும் விரும்புகிறது. சீன இந்தியாவுடன் கைகோர்த்து கூட்டாக முன்னேறும். இந்திய மக்கள் மறுமலர்ச்சியை நனவாக்கும் பாதையில், சீன மக்கள் எப்போது உங்களுடன் சேர்ந்து போவார்கள். மனிதகுல நாகரிகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள சீன மற்றும் இந்திய மக்கள், ஆசிய மற்றும் உலக வளர்ச்சிக்கு மேலும் முக்கிய பங்காற்றுவர் என்று நம்புகிறேன்.

நன்றி.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040