• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்: கைகோர்த்து, மறுமலர்ச்சி கனவைத் தேடும்
  2014-09-19 01:24:06  cri எழுத்தின் அளவு:  A A A   

பழங்காலம் தொட்டு இதுவரை சீனத் தேசம் படிப்பில் பெரும் கவனம் செலுத்தியுள்ளது. இடைவிடா படிப்பு மற்றும் சேமிப்பின் மூலம் சீராக வளரும் என்றும் படிக்கத்தக்கவரிடமருந்து சாதகத்தைப் படித்துப் பாதகத்தைத் திருத்த வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. இத்தகைய எழுச்சியுடனே சீனா இன்றைய வளர்ச்சியைப் படைத்துள்ளது.

மேலும், அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதில் சீனா பெரும் கவனம் செலுத்தியுள்ளது. அதுவும் சீனா எப்போதும் ஊன்றி நிற்கும் தூதாண்மைக் கோட்பாடாகும். அண்டை நாடுகளுடன் நட்புறவை மனமார வளர்த்து ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து கொண்டு கூட்டு வளர்ச்சியையும் வெற்றியையும் பெற வேண்டும்.

130கோடிக்கும் அதிக மக்கள் தொகையுடைய நாடான, சீனா சில பத்து ஆண்டுகாலத்தில் வளர்ந்த நாடுகளின் நூற்றுக்கணக்கான வளர்ச்சிப் போக்கை நிறைவேற்றியுள்ளது. அது வரலாற்றுத் தன்மை வாய்ந்த சாதனையாகும். அதே வேளை, சீனா இன்னும் உலகிலுள்ள மிகப் பெரிய வளரும் நாடாகும். சோஷலிசத்தின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்று நாம் தெளிவாக உணர்ந்தோம். பெரும் மக்கள் தொகையால் சீனாவின் நபர்வாரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகில் சுமார் 80வது இடத்தை வகிக்கின்றது. 130கோடி மக்கள் அனைவரின் வாழ்க்கையை மேம்படுத்த இன்னும் நீண்டகால முயற்சி தேவைப்படும்.

2020ஆம் ஆண்டில், சீன உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பும், நகரவாசி மற்றும் கிராமவாசி நபர்வாரி வருமானமும் 2010ஆம் ஆண்டில் இருந்ததை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். 2050ஆம் ஆண்டில், செழுமையான ஜனநாயகமான நாகரிகமான நல்லிணக்கமான சோஷலிச நவீனமயமாக்க நாடாக சீனா மாறும். இவ்விலக்கை சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியை நனவாக்கும் சீன கனவாக அழைக்கிறோம்.

சீன கனவை நனவாக்க, சீனாவுக்கு நீண்டகால அமைதியான நிதானமான வெளிப்புற சூழல் தேவைப்படும். அமைதியான வளர்ச்சி பாதையில் நடந்தால் தான், சீனா வளர்ச்சி இலக்கை நனவாக்க முடியும். சீன மக்கள், அண்மையுகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக போரில் துன்பப்பட்டுள்ளனர். இந்த துன்பம், உலகின் எந்த இடத்திலும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறோம். உங்களுக்குப் பிடிக்காததை, பிறருக்கு கொடுக்கக் கூடாது என்று சீன பழமொழி சொல்கிறது. சீன மக்கள், அமைதியைப் பேணிகாக்கும் மனவுறுதி அசைக்கப்பட முடியாதது.

பெரியோர்களே, தாய்மர்களே, நண்பர்களே,

நேபாளத்திலிருந்து மாலதீவு வரை, ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளதேசம் வரை, தெற்காசிய மக்கள், ஒளிமயமான வாழ்க்கையை நேசிக்கின்றனர். நாட்டின் செழுமையைத் தேடுகின்றனர். இது, தெற்காசிய வளர்ச்சியின் அருமையான எதிர்காலத்தை வெளிப்படுத்துகிறது.

தெற்காசியா, எதிர்பார்ப்புகள் நிறைந்த உள்ளார்ந்த ஆற்றல் நிறைந்த பிரதேசமாகும். இது, ஆசியா ஏன் உலகத்தின் புதிய பொருளாதார வளர்ச்சித் துருவமாக மாறக் கூடும்.

அமைதியான நிதானமான செழுமையான தெற்காசியா, இப்பிரதேச நாட்டு மக்களின் நலன்களுக்கும் சீனாவின் நலன்களுக்கும் பொருந்தியது. சீனா, தெற்காசிய பல்வேறு நாடுகளுடன் இணக்கமாக பழகி கொண்டு தெற்காசிய வளர்ச்சிக்கு உதவி செய்ய விரும்புகிறது. பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதையின் கட்டுமானத்தை சீனா முன்வைத்துள்ளது. பாரம்பரிய பட்டுப்பாதையின் நெறிவரையில் அமைந்துள்ள நாடுகளை இணைத்து, கூட்டு செழுமை, வர்த்தக ஒத்துழைப்பு, மக்களிடையே புரிந்துணர்வு ஆகியவற்றை நனவாக்குவது, அதன் நோக்கமாகும். இந்த கருத்தின் மூலம், சீனா, தெற்காசியாவுடன் செழுமை பெறுவதை விரும்புகிறது.

சீனாவும் இந்தியாவும், முக்கியமான வர்த்தக கூட்டாளிகளாகும். இரு தரப்புகளிடையேயான ஒத்துழைப்பு, தட்டியெழுபப்பட வேண்டிய ஆற்றல் போன்றது. அடுத்த 5 ஆண்டுகளில், இரு தரப்பு வர்த்தகத் தொகை, 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்ட இரு தரப்புகளும் பாடுபடும். தெற்காசியாவிலுள்ள சீன முதலீடு, மூவாயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு உயர்த்தப்படும். சீனா, இந்நாடுகளுக்கு ஈராயிரம் கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்கும். அடுத்த 5 ஆண்டுகளில், சீனா 10 ஆயிரம் தெற்காசிய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை வழங்கும். 5 ஆயிரம் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும். 5 இளைஞர் பரிமாற்ற வாய்ப்புகளை வழங்கும். தெற்காசியாவுக்கு 5 ஆயிரம் சீன மொழி ஆசிரியர்களை அனுப்பும். சீன-தெற்காசிய அறிவியல் தொழில்நுட்ப கூட்டாளித் திட்டம் நடைமுறைப்படும். சீன-தெற்காசிய பொருட்காட்சியின் மூலமாக, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் புதிய மேடையை உருவாக்கும்.

சீனா, தெற்காசியாவின் மிக பெரிய அண்டை நாடாகும். இந்தியா, தெற்காசியாவிலான மிக பெரிய நாடாகும். இந்தியாவுடன் சேர்ந்து இப்பிரதேச வளர்ச்சிக்கு மேலதிக பங்கு ஆற்ற சீனா விரும்புகிறது. இமயமலையின் 2 பக்கங்களில் வாழ்கின்ற 300 கோடி மக்கள், அமைதி, நட்புறவு, நிதானம், செழுமை ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளச் செய்யும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040