• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்: கைகோர்த்து, மறுமலர்ச்சி கனவைத் தேடும்
  2014-09-19 01:24:06  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய நாகரிகம் மீது குழந்தைக்காலத்திலிருந்து கோலாகலமான ஆர்வம் கொண்டுள்ளேன். இந்தியாவின் வரலாறு என்னை ஆழமாக ஈர்த்துள்ளது. கங்கை நாகரிகம், மெளர்யா வம்சம், குப்தா வம்சம் முதலியவை பற்றிய வரலாற்று பத்திரிகைகளைப் பார்த்துள்ளேன். இந்தியா காலனிப்பட்ட வரலாறு, தேசிய விடுதலையை போராட்டும் வரலாறு ஆகியவற்றிலும், மஹத்மா காந்தியின் கருத்து மற்றும் வாழ்வு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகின்றேன். இவற்றின் மூலம் ஒரு மகத்தான தேசத்தின் வளர்ச்சி போக்கையும் எழுச்சியையும் புரிந்துகொள்ள விரும்புகின்றேன். புகழ்பெற்ற கவிஞர் இரபீந்தரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி உள்ளிட்ட கவிதைத்தொகுதிகளைப் படித்துள்ளேன். அவருடைய படைப்புகளில் நிறைய கவிதைகள் என் மனதில் ஆழப்பதிந்துள்ளன. "சூரியன் மறையும் போது அழுத்தால், நட்சத்திரங்களையும் இழப்போம்", "தன்னடக்கம் அடையும் போது, மாபெரும் நிலைமையை நாம் நெருக்கும் நேரம்" முதலியவை இதில் இடம்பெறுகின்றன. இந்த அருமையான தத்துவம் மிக்க கவிதைகளின் மூலம் நான் நிறைய அறிவுகளைப் பெற்றேன்.

இரண்டாவது, சீனாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று முன்னேற்றும் ஒத்துழைப்புக் கூட்டாளியாக இருக்க வேண்டும். இரு நாடுகளும் கைகோர்த்து கொண்டு ஆசிய செழுமையை விரைவுபடுத்தும். பிரதேச வளர்ச்சியைத் தூண்டும் உந்து ஆற்றலாகி பிரதேசத்தின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். பிரதேச ஒத்துழைப்பில் ஒத்த கருத்தைச் சேகரித்து தொடர்புடைய நாடுகளுடன் பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாடு மற்றும் தொடர்பு முன்னேற்றப் போக்கை முன்னேற்றுவிக்க வேண்டும். மேலும், வங்காளத் தேசம்-சீனா-இந்தியா-மியான்மார் பொருளாதார இடைவழியின் கட்டுமானத்தை விரைவுபடுத்திப் பிரதேசத்தின் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளியுறவு பற்றிய பேச்சுவார்த்தையைக் கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டும். பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் திறப்பு, வெளிப்படை, சமத்துவம், பொறுமையுடைய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக் கட்டுக்கோப்பை உருவாக்கிப் பன்னோக்கமான ஒத்துழைப்பையும் தொடரவல்ல வளர்ச்சியையும் நனவாக்க பாடுபட வேண்டும்.

மூன்றாவது, சீனாவும் இந்தியாவும் உலகில் செயல்நோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியாகி சர்வதேச ஒழுங்கின் மேலும் நியாயமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். தற்போது, அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியான கால ஓட்டம் ஓங்கி வளர்ந்துள்ளது. ஆனால், சர்வதேச உறவில் நியாயமற்ற நிலைமை இன்னும் முனைப்புடன் காணப்பட்டுள்ளது. பல்வேறு பிரதேச மோதல், போர் முதலிய அறைகூவல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. உலக அமைதியைப் பேணிக்காத்து கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற, தொடர்ந்து பாடுபட வேண்டும். உலக விவகாரங்களில் சீனாவும் இந்தியாவும் அதே போன்ற ஒத்த அறைக்கூவலை எதிர்நோக்கியதோடு, பரந்துபட்ட கூட்டு நலன்களையும் பெரும் கடப்பாடுகளையும் கொண்டுள்ளன.

இந்தியா மற்றும் சீனாவின் மொத்த மக்கள் தொகை 250கோடியைத் தாண்டியது. எந்த நாடும் பேசினால், முழு உலகமும் கேட்கும். இரு நாடுகளும் கைகோர்த்து கொண்டு ஒத்துழைத்தால், முழு உலகமும் ஈர்க்கும். சர்வதேச விவகாரங்களிலுள்ள செயல்நோக்கு ஒத்துழைப்பைச் சீனாவும் இந்தியாவும் வலுப்படுத்த வேண்டும். பஞ்ச சீல கோட்பாடுகளில் தொடர்ந்து ஊன்றி நிற்க வேண்டும். இறையாண்மை சமத்துவம், நியாயம், நேர்மை மற்றும் கூட்டுப் பாதுகாப்பை நிலைநிறுத்தி, கூட்டு வளர்ச்சி, ஒத்துழைப்பு மூலம் கூட்டாக வெற்றி பெறுதல், கசிப்பு மற்றும் அனுபவங்கள் பகிர்வில் ஊன்றி நிற்க வேண்டும். இரு நாடுகள் மற்றும் பரந்த வளரும் நாடுகளின் கூட்டு நன்மையைப் பேணிக்காக்க வேண்டும்.

மேலும், இரு நாடுகளும் தன் வளர்ச்சி மூலம் உலகப் பொருளாதார அதிகரிப்பு மற்றும் உலக நிர்வாகத்துக்குப் பெரிதும் பங்காற்ற வேண்டும். காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு முதலிய உலகப் பிரச்சினைகள் குறித்து வளரும் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டங்களை முன்வைக்க வேண்டும். சீனா-ரஷியா-இந்தியா, பிரிக்ஸ் நாடுகள், இருபது நாடுகள் குழு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முதலிய பல தரப்பு அமைப்பு முறையில் சீனா இந்தியாவுடன் செயல்நோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகிறது. ஐ﹒நா மற்றும் பாதுகாப்பவையில் மேலதிக பங்கு ஆற்றும் இந்தியாவின் விருப்பத்துக்கு சீனா ஆதரவளிக்கிறது.

அண்டை நாடுகளுக்கிடையே சர்ச்சை ஏற்படுவது இயல்பானது. எல்லைப் பிரச்சினை உள்பட வரலாறு விட்டுச்சென்ற பிரச்சினைகளை இரு நாடுகளும் சரிவர நோக்க வேண்டும். அமைதி மற்றும் நட்புக் கலந்தாய்வு மூலம், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள கூடிய நியாயமான தீர்வைக் கூடிய விரைவில் கண்டறியப் பாடுபட வேண்டும். அதே வேளை, நாம் கருத்து வேற்றுமையைக் களைந்து நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். இரு நாட்டு முன்னேற்றப் போக்கு மற்றும் இரு நாட்டுறவுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது. அண்டை நாடுகளுடன் நட்புறவை உருவாக்கிடும் ஆற்றலைச் சீனாவும் இந்தியாவும் கொண்டுள்ளன என்று நம்புகிறேன்.

மதிப்பிர்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே

பல இந்திய நண்பர்கள் சீனாவின் வளர்ச்சியைப் பெரிதும் கவனித்துள்ளனர். சீனா மேலும் சீராக வளர விரும்புகின்றனர். சீர்த்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த 30க்கும் மேலான ஆண்டுகளில், சீனப் பொருளாதாரச் சமூகம் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. மக்களின் வாழ்க்கை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் சீன வளர்ச்சி மூலம் பயனடைந்துள்ளன. அத்துடன், வளரும் சீனா மேலாதிக்கப் பாதையில் காலடியெடுத்து வைக்கும். பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்குமென சர்வதேசச் சமூகத்தில் சிலர் பறைசாற்றியுள்ளதாக நாம் கவனித்தோம். அமைதி வளர்ச்சிப் பாதையில் சீனா ஊன்றி நிற்குமென நான் அனைவருக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

சீனத் தேசம் எப்போதும் அமைதியில் ஊன்றி நிற்கிறது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நாடுவது சீனத் தேசத்தின் எழுச்சியில் வேரூன்றி பதிந்துள்ளது. ¡°வலிந்தோர் இருந்தாலும், நல்லிந்தோரைப் புண்படுத்தாது. பணக்காரராக இருந்தால், ஏழையைக் கொடுமைப்படுத்தாது¡± என்ற பழமொழியைச் சீனா பழங்காலம் தொட்டு இதுவரை ஊக்குவித்துள்ளது. ¡°பெரிய நாடாக இருந்த போதிலும், யுத்த வெறி நாடு இறுதியில் நாசமடையும் ¡± என்ற பழமொழியையும் இது தொகுத்தியுள்ளது. மேலும், நல்லிணக்கம் செல்வமிக்கது, வேற்றுமையைப் பொருட்படுத்தாமல் ஒருங்கிணைப்பைப் பேணிக்காப்பது, முந்தைய சர்ச்சையைப் பொருட்படுத்தாமல் அமைதியை வளர்ப்பது, உலகில் அனைவரும் உடன்பிறப்புகள் முதலிய கருத்துக்களும் சீனாவில் தலைமுறைத் தலைமுறையாகப் பரவியுள்ளன. பழங்காலச் சீனா உலகின் வல்லரசாகும். ஆனால், அமைதிக் கருத்தைச் சீனா பரப்புரை செய்துள்ளது. பட்டு, தேயிலை, பீங்கான் முதலியவற்றைச் சீனா ஏற்றுமதி செய்துள்ளது. உலகில் அனைவரும் உடன்பிறப்புகள் என்பது சீனா மற்றும் இந்தியாவின் பொது கருத்தாகும். சீனத் தேசம் முழுதும் பரவியுள்ள அன்பு கருத்தும், இந்தியாவின் கருத்தைப் போலவே இருக்கிறது. நாம் எப்போதும் நல்லிணக்க கருத்தைக் கொண்டு அனைத்து நாடுகளுடன் அமைதியாக நல்லிணக்கமாகக் கூட்டாக வளர விரும்புகிறோம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040