• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் ஏவென்க் இனத்தின் பண்பாடு 
  2014-11-02 15:43:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏவென்க் இனம், சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். இவ்வினம், மக்கள் தொகை குறைந்த சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தினர்கள், வட சீனாவின் ஹெலோங்ஜியாங் மாநிலத்திலும் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். இவ்வினத்துக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடு உண்டு.

"சீனாவின் இறுதியான வேட்டை பழங்குடியினம்" என அழைக்கப்படும் ஏவென்க் இனத்தின் ஒரு கிளையாளர்கள், உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கென்ஹெ நகரின் ஓலுகுயா ஏவென்க் இன வட்டத்தில் முக்கியமாக வாழ்கின்றனர். வரலாற்றில், இப்பழங்குடியினர், வேட்டை, கலைமான் வளர்ப்பு ஆகியவற்றை முக்கிய உற்பத்தி முறையாக கொண்டவர்கள். இதனால் இப்பழங்குடியினம், "கலைமான் பயன்படுத்தும் பழங்குடியினம்" என அழைக்கப்படுகிறது. இப்பழங்குடியினம், பொது குடி மரபுக்குழு என்ற பழமைவாய்ந்த சமூக அமைப்பை, அண்மையுகம் வரை நீட்டித்தது. இவ்வினம், பொது குடி மரபுக்குழுவுக்கிணங்க, வேட்டைப் பகுதிகளைப் பிரித்தது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040