• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் ஏவென்க் இனத்தின் பண்பாடு 
  2014-11-02 15:43:17  cri எழுத்தின் அளவு:  A A A   

திரைப்படம் காண்பித்தல் மண்டபத்தில், காணொளி, ஒலி, ஒளி, மின்சாரம் உள்ளிட்ட அறிவியல் தொழில் நுட்ப முறையில், இப்பழங்குடியினரின் வேட்டை, மர்ச் மரப்பட்டை, சாமன் மதம், கலை மான், வட துருவ மண்டலப் பண்பாடு ஆகியவை மேலும் சரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஓலுகுயா என்பது, ஏவென்க் இன மொழியாகும். இதற்கு, "போப்லார் மரக்காடு தழைந்து வளரும் இடம்" என பொருட்படுகிறது. ஓலுகுயா ஏவென்க் வேட்டைக்காரன் சீனாவில் கலைமானை வளர்க்கும் ஒரே ஒரு பழங்குடியினத்தவர் ஆவர். இதனால் அவர்கள், "கலைமான் பயன்படுத்தும் பழங்குடியினத்தவர்" என்று அழைக்கப்படுகின்றனர்.

2003ஆம் ஆண்டு, இப்பழங்குடியினர் இடம்பெயர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்கு பின், ஓலுகுயா ஏவென்க் கலைமான் பண்பாட்டுக் காட்சியகம் தற்போதைய இடத்துக்குக் குடிபெயர்ந்தது என்று ஓலுகுயா வட்டத் தலைவர் தாய் குவாங் மிங் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு, இக்காட்சியகத்தைச் சீரமைப்பதற்கு கென்ஹா நகராட்சி அரசு நிதியுதவி வழங்கியது. தற்போது, இக்காட்சியகத்தின் நிலப்பரப்பு, 3 ஆயிரம் சதுர மீட்டரை எட்டியுள்ளது.

தற்போது, இக்காட்சியகத்தில் சுமார் 380 தொல் பொருட்கள் இடம்பெறுகின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040