• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் ஏவென்க் இனத்தின் பண்பாடு 
  2014-11-02 15:43:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஓலுகுயா ஏவென்க் இனப் பாரம்பரிய கைவினைக் கலை, சீனாவின் வடப் பகுதியின் வேட்டை இனத்துக்குரிய பண்பாடாகும். வேட்டைக் கருவித் தயாரிப்பு, பிர்ச் பட்டை பொருள் தயாரிப்பு கைவினைக் கலை, பிர்ச் மரப் பொருட்கள் ஆகியவை, ஓலுகுயா ஏவென்க் பழங்குடியினத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அடையாள பண்பாட்டு மாதிரிகளாகும்.

இக்காட்சியகத்தின் பக்கத்தில், பிர்ச் பட்டைப் பண்பாட்டுக் காட்சி மண்டபமும், தேசிய இனக் கைவினைக் கலைப் பணிமனையும் நிறுவப்பட்டுள்ளன. பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகளைப் பரிந்துரை செய்து, தேர்வு மூலம் உறுதிப்படுத்துவது, இளைஞர்களுக்கு கைவினைக் கலையைக் கற்றுக்கொடுப்பது ஆகிய முறைகள் மூலம், இப்பழங்குடியினரின் பாரம்பரியப் பண்பாடு மற்றும் கைவினைக் கலையை உள்ளூர் அரசு பரவல் செய்துள்ளது. கலைமான், பிர்ச் பட்டைப் பொருள் கைவினை கலை, சாமன் மத நடனம் ஆகியவை, சீனாவின் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இக்காட்சியகத்தில், குறுகிய ஒரு மணி நேரப் பயணத்தில், ஏவென்க் இனத்தின் சில நூறு ஆண்டுகால வரலாற்றை அறிந்து கொண்டுள்ளோம். ஏவென்க் இன மக்களின் வரலாறு, வேட்டை வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. ஏவென்க் இனப் பண்பாடு கலைமான் தோலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டுள்ளோம். ஏவென்க் இன மக்கள், கலைமான் மற்றும் தா சிங் அன் லிங் வனப்பிரதேசம், இவ்வேட்டை பழங்குடியினரின் வரலாற்றை நேரில் கண்டுள்ளனர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040