• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் ஏவென்க் இனத்தின் பண்பாடு 
  2014-11-02 15:43:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஓலுகுயா ஏவென்க் வேட்டைப் பண்பாட்டுக் காட்சியகத்தைப் பார்வையிட்ட பிறகு, ஏவென்க் இனத்தைச் சேர்ந்த நான்கு முக்கிய குடும்பங்களின் வம்சாவழி குறிப்புக்கள் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சுமார் 200 ஆண்டுகளுடைய இந்த குடும்ப வம்சாவழி குறிப்புக்கள் அண்மையில் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கென்ஹெ நகரில் வெளியிடப்பட்டது. ஏவென்க் இனத்தின் வரலாற்று ஆய்வுத் துறையின் வெற்றிடங்களை இக்குடும்ப வம்சாவழி குறிப்புக்கள் நிரப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உள் மங்கோலிய Zha Lan Tun நகரின் தொழிற்துறை மற்றும் வணிக அலுவலகத்தின் அலுவலர் துங் லியன் செங் இப்போது ஓய்வு பெற்றார். அவர் இக்குடும்ப வம்சாவழி குறிப்புக்களைத் தொகுப்பவராக விளங்குகின்றார். அவரது அறிமுகத்தின்படி, இக்குடும்ப வம்சாவழி குறிப்புக்கள், வரைபட முறையில், கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக, தா சிங் அன் லிங் என்னும் வனப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஏவென்க் இன மக்ளின் பொதுக்குடி மரபுக்குழு உறவு, குருதி உறவு, தலைமுறைகளுக்கிடை உறவு, பிறப்பு மற்றும் இறப்பு நேரம், இறப்புக் காரணம் உள்ளிட்ட அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன. இக்குறிப்புக்கள் 19வது நூற்றாண்டின் துவக்கக் காலம் தொட்டு, 2008ஆம் ஆண்டு வரையாக நீடித்துள்ளன. ஏவென்க் இனத்தின் வளர்ச்சி நிகழ்வு நிலையையும், எதிர்கால வளர்ச்சிப் போக்கினையும் ஆராய்வதற்கு இக்குடும்ப வம்சாவழி குறிப்புக்கள் அரிய வரலாற்று தரவுகளாக விளங்குகின்றன என்று துங் லியன் செங் தெரிவித்தார்.

கலைமான் பயன்படுத்தும் ஏவென்க் இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பொது குடி் மரபுக்குழுவுக்கும் குடும்ப வம்சாவழி குறிப்பு உண்டு. எழுத்துக்கள் இல்லாததால், இக்குடும்ப வம்சாவழி குறிப்பு பேச்சு மொழி மூலம் கையேற்றப்பட்டுள்ளது. வரலாற்று மற்றும் சமூக மாற்றம் ஆகிய காரணமாக, கடந்த நூற்றாண்டின் துவக்க காலத்திலிருந்து, இக்குடும்ப வம்சாவழி குறிப்புகள் படிப்படியாக இழந்து விட்டன.

பணி காரணமாக, துங் லியன் செங் ஏவென்க் வேட்டைக்காரனுடன் பழகிக்கொண்டார். வேட்டைக்காரனின் வரலாறு மீது அவர் பேரார்வம் கொண்டார். ஆனால், இவ்வினம் பற்றிய தரவுகள் மிகவும் குறைவு. இவ்வினத்தவர் பேச்சு மொழி மூலம் பதிவு செய்த வரலாற்றையும், தற்போதைய தரவுகளையும் இணைத்து, இக்குடும்ப வம்சாவழி குறிப்புகளை அவர் தொகுத்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் ஓய்வு நேரத்தில் வேட்டைக்காரனின் வீடுகளுக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டு, அதிகமான அரிய தரவுகளைப் பெற்றுள்ளார்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040