• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் ஏவென்க் இனத்தின் பண்பாடு 
  2014-11-02 15:43:17  cri எழுத்தின் அளவு:  A A A   

Cuo Luo Zi

இலையுதிர்காலத்தில் உள்ள அக்டோபர் திங்கள், உள் மங்கோலியாவின் கென்ஹெ நகரில், இலையுதிர்க்காலக் காட்சிகள் அழகானவை. ஓலுகுயா ஏவென்க் இன வேட்டைக்காரர்கள் இங்கே வாழ்கின்றனர். 

வேட்டைக்காரர்களின் வேட்டை வாழ்க்கை மீது அங்கே பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் பேரார்வம் கொள்வார்கள்.

வனப் பிரதேசத்திலுள்ள மூலப் பண்பாட்டை அறிந்து கொள்ள, ஓலுகுயாவிலுள்ள ஏவென்க் இனக் கலைமான் பண்பாட்டுக் காட்சியகத்தைப் பார்வையிடுவது, பயணிகளின் தேர்வாக மாறியுள்ளது.

Cuo Luo Zi என்பது, ஏவென்க், ஓரோகுன் உள்ளிட்ட வட கிழக்கு சீனாவிலுள்ள வேட்டை மற்றும் நாடோடி இனம் வசிக்கும் கூம்பு வடிவத்திலான வீடாகும். இக்காட்சியகத்திலுள்ள 6 காட்சி மண்டபங்களில், Cuo Luo Zi, வேட்டை கருவிகள், தோல் மற்றும் மயிர்ப் பொருட்கள், கலைமான் கொம்பு அலங்காரப் பொருட்கள் பயணிகளுக்கு, சீனாவின் இறுதியான வேட்டை பழங்குடி மக்களின் தனிச்சிறப்பு மிக்க வேட்டைப் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040