• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு
  2015-06-05 16:31:16  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் பிற்பகல், நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் உள்ள "சீன மண்டபம்" திறந்து வைக்கப்பட்டது. "பொது தாயகம்", "ஒன்று மற்றொன்றுடன் இணையும் உலகம்" என்ற தலைப்பில், சீனக் கலைஞர் வாங் லீன் ச்சு இயற்றிய இரு ஓவியப் படைப்புகள், இம்மண்டபத்தில் கோலாகலமான சீன நடையுடை பாவனைகளை அதிகரித்துள்ளன.

இவ்விரு படைப்புகள், "ஐ.நா கட்டிடத்துக்கு அழகினை அதிகரித்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதில் சீனா வெளிக்கொணர்ந்துள்ள முக்கிய பங்குகளை வெளிப்படுத்துகின்றன" என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் பாராட்டினார்.

2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், பெய்சிங்கில் நடைபெற்ற ஏபெக் என்னும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அவர்களது துணைவியர்களும், சீன பாணியுடைய ஆடையை அணிந்து, செய்தியாளர்களின் முன்னால் தோன்றியதும், பாரம்பரிய சீன ஆடை பண்பாடு, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக மக்களிடையே புதிய ஆடை பாணி பரவியுள்ளது.

சீனக் கலைஞர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களின் கருத்து, சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாடுகள் சந்திக்கும் போக்கில், சீனத் தேசப் பண்பாட்டைப் பரவல் செய்து, வளர்ப்பது என்ற சீனாவின் கருத்துக்கு பொருந்தியதாக இருக்கின்றது.

இக்கருத்தின்படி, 2014ஆம் ஆண்டு சீனப் பண்பாடு, உலகப் பண்பாட்டுத் துறையில் உறுதியாக காலூன்றி நின்று, மதிப்பையும் வென்றெடுத்துள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040