• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு
  2015-06-05 16:31:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தேசத்தின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடுகள், உலகளவில் சீனாவின் செல்வாக்கை அதிகரித்துள்ளன. பாரம்பரிய பண்பாட்டுக்கும் நவீனப் பண்பாட்டுக்குமிடையேயான ஒன்றிணைப்பு மூலமும், தேசியப் பண்பாட்டுக்கும், பல்வேறு நாட்டுப் பண்பாட்டுக்குமிடையேயான ஒன்றிணைப்பு மூலமும், உலகளவில் சீனப் பண்பாட்டின் தகுநிலையை சீனா வலுப்படுத்தியுள்ளது என்பது மக்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.

இந்த முன்னேற்றம், சீனாவின் புதிய தலைமுறை தலைவர்களின் புதிய கருத்துடன் தொடர்புடையது. சீனப் பாரம்பரியப் பண்பாடு மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் பல முறை வலியுறுத்தினார். சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடு, சீனத் தேசத்தின் நாகரிக உயிராற்றலாகும். இது சீனா உலகப் பண்பாட்டு அரங்கில் உறுதியாக காலூன்றி நிற்கும் வன்மையான அடிப்படையுமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பண்பாட்டின் விவேகமும் ஆற்றலும், மனித குலத்தின் முன்னேற்றத்தைத் தூண்டும் அடிப்படை சக்தியாகும். எதிர்காலத்தை முன்னோக்கி பார்க்கையில், சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடு, பல்வேறு நாடுகளின் தலைசிறந்த பண்பாடுகளுடன் இணைந்து, மனித குலத்துக்கு நன்மை பயக்கும்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040