• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு
  2015-06-05 16:31:16  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள், 9வது கன்பிஃசியெஸ் கழக மாநாடு சீனாவின் சியா மன் நகரில் துவங்கியது. உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2000க்கு அதிகமான பிரதிநிதிகள் ஒன்றுகூடி, இக்கழகத்தின் அடுத்த பத்து ஆண்டுக்காலத்தை வரவேற்றனர்.

உலகளவில் சீன மொழி கல்வியின் பரவலை விரைவுபடுத்தி, சீனப் பண்பாட்டின் செல்வாக்கை உயர்த்தும் வகையில், 2004ஆம் ஆண்டு முதல், வெளிநாடுகளில், சீன மொழியைக் கற்றுக்கொடுத்து, சீனப் பண்பாட்டைப் பரவல் செய்வதை இலக்காக கொண்ட கல்வி நிறுவனமான கன்பிஃசியெஸ் கழகத்தை சீனா நிறுவியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், உலகில் உள்ள 126 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 475 கன்பிஃசியெஸ் கழகங்களும், 851 இடைநிலைப்பள்ளி மற்றும் துவக்கப் பள்ளி கன்பிஃசியெஸ் வகுப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. உலகில் சீன மொழி கற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை, 3 கோடியிலிருந்து, 10 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகமயமாக்கப் போக்கில், உலகின் பல்வேறு நாடுகளிடை நலன்கள் ஒன்றிணைந்துள்ளன. பண்பாட்டுப் பரிமாற்றம் என்பது, பல்வேறு நாடுகள் ஒன்றுக்கொன்றான தொடர்புக்கு ஒரு முக்கிய சன்னல் ஆகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040