• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு
  2015-06-05 16:31:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சுங் பட்டுத்துணி மீண்டும் புத்துயிர் பெறுவது, 2014ஆம் ஆண்டு சீனப் பாரம்பரியப் பண்பாட்டின் மறுமலர்ச்சியில் ஒரு மாதிரியாகும். 2014ஆம் ஆண்டு, "வெண்கலத்தின் அழகு" என்ற சூ சோ நகரின் பூத்தையல் கலையின் தலைசிறந்த படைப்புகள், ஹாங்காங்கிலுள்ள சீனப் பண்பாட்டுக் கலைப் பொருட்கள் வியாபார மையத்தில் நுழையத் துவங்கின.

2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 8ஆம் நாள், இந்த கலைப் பொருளின் பங்கு பத்திரங்கள் சந்தையிடப்பட்டதன் மூலம், அந்த நாள் 5 கோடியே 50 லட்சம் ஹாங்காங் டாலர் திரட்டப்பட்டுள்ளது.

சூ சோ பூத்தையல் வேலை, சுமார் 2000 ஆண்டுகள் வரலாறுடையது. சீனாவின் நான்கு தலைசிறந்த பூத்தையல் கலைப் பொருட்களின் தரவரிசையில் சூ சோ பூத்தையல் பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. கைகளால் தயாரிக்கப்படும் சூ சோ பூத்தையல் பொருட்கள், இன்று வரை ஒளிவீசுகின்றன. பூத்தையல் கலைத் திறனில் தேர்ச்சி பெற்ற எண்ணற்ற மங்கையர்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

44 வயதான யாவ் சின் குவா அம்மையார், 7 வயதிலிருந்து பூத்தையல் கலையைக் கற்றுக்கொள்ள துவங்கினார். அவர் பயன்படுத்தியுள்ள பட்டு நூலின் நீளம், 500 கிலோமீட்டரை தாண்டுகின்றது.

சூ சோ பூத்தையல் பொருட்கள் பங்கு பத்திர சந்தையில் நுழைந்தது எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. மேலதிக தலைசிறந்த படைப்புகளைப் பூத்தையல் செய்ய வேண்டும் என்றும், பாரம்பரிய பண்பாடு, மூலதனச் சந்தை மூலம் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் யாவ் சின் குவா அம்மையார் நம்பிக்கை கொண்டுள்ளார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040