• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பண்பாட்டு அரங்கில் பரவி நிறைந்த சீனப் பண்பாடு
  2015-06-05 16:31:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், சீனா உலக அரங்கில் மேலும் முக்கிய பங்காற்றியுள்ளது. சீனப் பண்பாடு மேலதிக சுய நம்பிக்கையுடன் உலகில் தோன்றியுள்ளது.

சியாங் சு மாநிலத்தின் வூ சியாங் திங் செங் பட்டுத் துணி கூட்டு நிறுவனம், ஏபெக் அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில், புதிய சீன பாணியுடைய ஆடைகளை தயாரிப்பதற்கு துணியை வழங்கும் நிறுவனமாகும். ஏபெக் கூட்டத்துக்கு பின், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த முன்பதிவு படிவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி இக்கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வூ சியன் குவா மிகவும் அமைதியாக தெரிவிக்கின்றார். "பட்டுத் துணியின் மன்னர்" என அழைக்கப்படும் சுங் பட்டுத் துணி புத்துயிர் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தயாரிப்பு செய்முறை உள்ளிட்ட பிரச்சினைகளின் காரணமாக, கடந்த நூற்றாண்டின் 60ஆம் ஆண்டுகள் முதல், சுங் பட்டுத்துணி தயாரிப்பு மிகத் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

திங் செங் பட்டுத்துணி கூட்டு நிறுவனம், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து நெசவு கருவிகளை இறக்குமதி செய்தது. ஆய்வு மூலம், சீனாவில் பட்டு நெசவுத் தொழிலில் இருந்த பல வெற்றிடங்கள் நிரம்பியுள்ளன. 2011ஆம் ஆண்டு திங் செங் பட்டுத் துணி கூட்டு நிறுவனம், தன் தொழில் சின்னத்தை உருவாக்கியது.

இச்சாதனை பற்றி வூ சியன் குவா மனநிறைவு அடையவில்லை. புத்தாக்கத்தை வலுப்படுத்தி, பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதை என்ற நெடுநோக்கு திட்டம் தரும் வாய்ப்பைக் கொண்டு, சுங் பட்டுத் துணி சர்வதேச சந்தையில் நுழையும் காலடியை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040