• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோ நகரம்
  2015-10-20 16:47:59  cri எழுத்தின் அளவு:  A A A   

"ச்சுவான் சோவில் மிக முன்னதாக வாழ்ந்த மின் யுயெ இன மக்கள், கடல் பயணத்திலும் கப்பல் தயாரிப்பிலும் தேர்ச்சி பெற்றவர்கள். கடல் வழி பட்டுப்பாதையின் உருவாக்கத்துக்கு இது அடிப்படையிட்டது. தாங் வம்சம், ச்சுவான் சோ துறைமுகம் வளர்ச்சி அடையத் துவங்கும் காலமாகும். சொங் மற்றும் யுவான் வம்சக்காலம், ச்சுவான் சோ மிக விறுவிறுப்பாக வளர்ச்சி அடைந்த காலமாகும்" என்று இந்த அருங்காட்சியகத்தின் எடுத்துரைஞர் கூறினார்.

ச்சுவான் சோ துறைமுகத்தில் சர்வதேச வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வருவதோடு, சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்ற மையமாகவும் அது மாறியது. பல்வேறு நாடுகளின் வணிகர்கள் இங்கே அதிகமான வணிக நலன்களைப் பெற்றனர். இது மட்டுமல்லாமல், சொந்த மதப் பண்பாட்டையும அவர்கள் கொண்டு வந்தனர். இதனால், அப்போது உலகளவில் ஏறக்குறைய அனைத்து முக்கிய மதங்களும் ச்சுவான் சோவில் நுழைந்து பரவி வந்தன. இந்த அருங்காட்சியகத்தின் மத கல்வெட்டு அரங்கில், இஸ்லாமிய மதம், பழைய கிறிஸ்துவ மதம், இந்து மதம் முதலிய மதப்பிரிவுகளைச் சேர்ந்த நுற்றுக்கணக்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வேறுபட்ட மதப் பண்பாட்டு வளங்கள் இணைந்திருந்து தனிச்சிறப்புமிக்க உள்ளூர் பண்பாட்டை உருவாக்கின என இந்தக் கல்வெட்டுகளிலுள்ள உருவங்களை ஆய்வு செய்து, அறிந்து கொள்ள முடிகிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040