• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் கடந்த கால தூதாண்மை அதிகாரிகள்]

ஜிபென்வெ

ஜிபென்வெ, 1972 முதல்-1974வரை, சீன வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தார்.

அவர், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசுக்கான சீனாவின் முதலாவது தூதராகவும், சீனத் துணை வெளிநாட்டமைச்சராகவும், வெளிநாட்ட மைச்சராகவும் பதவி வகித்தார். 1979ஆம் ஆண்டுக்குப் பின், அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி சர்வதேச தொடர்பு துறைத் தலைவராகவும் துணைத் தலைமையமைச்சராகவும் தலைமை செயலாளராகவும் பொறுப்பு ஏற்றார். அரசவையின் கீழுள்ள ஹாங்காங் மற்றும் மகௌ அலுவலகத் தலைவராகவும் சீன மக்கள் குடியரசின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படைச் சட்ட வரைவுக் கமிட்டித் தலைவராகவும் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படைச் சட்ட வரைவுக் கமிட்டித் தலைவராகவும் பதவி வகித்த போது, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கருத்துக்கிணங்க சீன அரசு வகுத்த ஹாங்காங் மற்றும் மகௌ பிரச்சினைகளைச் சமாதான முறையில் தீர்ப்பதென்ற கொள்கையையும் கோட்பாட்டையும் அவர் முனைப்புடன் நடைமுறைப்படுத்தினார். ஹாங்காங் பிரச்சினை பற்றிய சீன-பிரிட்டிஷ் கூட்டறிக்கையில் கையொப்பமிடும் விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040