• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் கடந்த கால தூதாண்மை அதிகாரிகள்]

லீ ச்சௌசிங்

லீ ச்சௌசிங், 2003ஆம் ஆண்டு முதல் இதுவரை சீன வெளிநாட்டமைச்சராகப் பொறுப்பு ஏற்றுவருகின்றார். 1940ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் பிறந்த அவர், சான்துங் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1964ஆம் ஆண்டில் பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1970 முதல் 1977 வரை, கெனிய குடியரசுக்கான சீனத் தூதரகத்தின் பணியாளராகப் பணி மேற்கொண்டார். 1985 முதல் 1990 வரை சீன வெளிநாட்டமைச்சின் செய்தித்துறை பகுதியின் துணைத் தலைவராகவும், தலைவராகவும் வெளிநாட்டமைச்சின் செய்தித்தொடர்பாளராகவும் பொறுப்பு ஏற்றார். 1993 முதல் 1995 வரை, ஐ.நாவுக்கான சீன மக்கள் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் முழு உரிமையுடைய சிறப்புத் தூதராகவும் இருந்தார். 1998 முதல் 2001 வரை, அமெரிக்காவுக்கான சீன மக்கள் குடியரசின் முழு உரிமையுடைய சிறப்புத் தூதராகப் பதவி வகித்தார். 2001 முதல் 2003ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, சீனத் துணை வெளிநாட்டமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். 2003ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் சீன வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்துவருகின்றார்.


1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040