• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் கடந்த கால தூதாண்மை அதிகாரிகள்]

சியாவ் குவான் ஹுவா

சியாவ் குவான் ஹுவா 1974முதல் 1976 வரை சீன வெளி நாட்டமைச்சராகப் பதவி வகித்தார்.

சியாவ்குவஹுவா, சியாங்சு மாநிலத்தின் யென்சன் நகரைச் சேர்ந்தவர். ஜெர்மனியின் பல்கலைகழகத்தில் பயின்ற அவர், தத்துவ டாக்டர் என்ற பட்டம் பெற்றார். சீனாவுக்கு எதிராக ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர் தொடுத்த போரின் போது, அவர் முக்கியமாக செய்தியாளராகப் பணி மேற்கொண்டார். சர்வதேச விமர்சனக் கட்டுரை எழுதினார். 1942ஆம் ஆண்டு அவர் சுன்சிங் மாநகருக்குச் சென்று, அங்கு வெளியிடப்படும் சிங்ஹுவா நாளேட்டின் சர்வதேசப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் வெற்றி பெறும் வரை அவர் இப்பணியில் ஈடுபட்டுவந்தார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், வெளிநாட்டமைச்சின் தூதாண்மை கொள்கைக் கமிட்டித் துணைத் தலைவர், வெளிநாட்டமைச்சரின் உதவியாளர், துணை வெளிநாட்டு அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தார். வெளிநாட்டமைச்சகத்தில் பணி புரிந்த நாட்களில், முக்கிய தூதாண்மை ஆவணங்களை வரைந்தார் அல்லது அவற்றை எழுதுவதற்குத் தலைமை தாங்கினார். 1976ஆம் ஆண்டுக்குப் பின் வெளி நாடுகளுடனான சீன மக்களின் நட்புறவுச் சங்கத்தின் ஆலோசகராகப் பொறுப்பு ஏற்றார். அவருடைய முக்கிய படைப்புகள், சர்வதேச விமர்சனக் கட்டுரைத் தொகுதி, மியூனிக் முதல் DUNKERQUE வரை முதலியவையாகும்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040