• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் கடந்த கால தூதாண்மை அதிகாரிகள்]

ஹுவாங்ஹுவா

ஹுவாங்ஹுவா, 1976 முதல் 1982 வரை சீன வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தார்.

1971ல், ஐ.நாவிலுள்ள சீனாவின் சட்டபூர்வ தகுநிலை மீட்கப்பட்டதை அடுத்து, ஐ.நா மற்றும் பாதுகாப்பு அவைக்கான சீனாவின் முதலாவது நிரந்தரப் பிரதிநிதியாக விளங்கினார். 1976ஆம் ஆண்டு, வெளிநாட்டமைச்சராகப் பொறுப்பு ஏற்ற அவர், சீனப் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, ஐ.நா.பொது பேரவையின் 29வது, 32வது, 33வது, 35வது மற்றும் 37வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில், அவரும் ஜப்பானிய வெளிநாட்டமைச்சரும் பெய்ஜிங்கில் சீன மக்கள் குடியரசுக்கும்-ஜப்பானுக்குமிடையிலான சமாதான நட்புறவு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். 1978ல் நடைபெற்ற தூதாண்மை உறவை நிறுவுவது பற்றிய அமெரிக்கப் பிரதிநிதியுடனான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார். 1982ஆம் ஆண்டு, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை செய்வதென்ற பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான ஆகஸ்ட் 17 அறிக்கையில் அவரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹெய்கும் கையொப்பமிட்டனர். 1985முதல் 1995வரை, சர்வதேச செயல் இயக்குனர் குழுவின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். தற்போது, சீன சர்வதேச நண்பர் ஆய்வுச் சங்கத்தின் தலைவர், சீன சர்வதேச நட்புறவு தொடர்பு சங்கத்தின் தலைவர், சீன பொது நலன் சங்கத் தலைவர், சொங்சிங்லின் நிதியத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்குப் பொறுப்பு ஏற்கின்றார்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040