• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் கடந்த கால தூதாண்மை அதிகாரிகள்]

தாங்சியாசியென்

தாங்சியாசியென், 1998 முதல் 2003 வரை, சீன வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தார்.

அவர் 1938ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் சாங்காயில் பிறந்தார். அவர் சியாங்சு மாநிலத்தின் சென்ஜியாங் நகரைச் சேர்ந்தவர். 1973ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட பின், சாங்காய் வுதான் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழித் துறையில் பயிலத் துவங்கினார். 1970 முதல் 1978 வரை, வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புறவுச் சங்கம் மற்றும் சீன-ஜப்பானிய நட்புறவுச் சங்கத்தின் இயக்குநராகவும் வெளிநாடுகளுடனான சீன நட்புறவுச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். 1988 முதல் 1991 வரை, ஜப்பானுக்கான சீனத் தூதரகத்தின் அமைச்சர் நிலை கவுன்செலராகவும் தூதரகத்திந் அமைச்சராகவும் பதவி வகித்தார். 1991 முதல் 1993 வரை, சீன வெளிநாட்டமைச்சரின் உதவியாளராகப் பணி மேற்கொண்டார். 1993ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரை சீனத் துணை வெளிநாட்டமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். 1998ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் சீன வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தார். 2003ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அரசவை உறுப்பினராகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040