|
![]() |
சியென் சிசன்
சியென் சிசன், 1988முதல் 1998வரை, சீன வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தார்.
1928ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் பிறந்த அவர் சாங்காய் மாநகரின் சியாதின் திஸ்திற்க்தைச் சேர்ந்தவர். 1942ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியில் ஈடுபடத் துவங்கினார். அவர், பல்கலைக்கழகப் பட்டதாரிக்குரிய கல்வியறிவு வாய்ந்தவர். 1942 முதல் 1945 வரை சாங்காய் தாதொன் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள இடைநிலைப் பள்ளியில் பயின்ற போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, கட்சிக் குழுத் தலைவராகவும் கட்சி கிளைச் செயலாளராகவும் பொறுப்பு ஏற்றார். 1954-1955ஆம் ஆண்டில், சோவியத் யூனியனின் மத்திய கம்யூஸ இளைஞர் சங்கத்தின் பள்ளியில் பயின்றார். 1955 முதல் 1963 வரை,சோவியத் யூனியனுக்கான சீனத் தூதரகத்தின் 2வது செயலாளராகவும் வெளி நாடுகளில் கல்வி பயிலும் மாணவர் பகுதியின் துணை இயக்குநராகவும் ஆய்வகத்தின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.
1963 முதல் 1966 வரை, சீன உயர் கல்வியமைச்சின் வெளி நாடுகளில் கல்வி பயிலும் மாணவர் பகுதித் தலைவராகவும் வெளிவிவகாரப் பகுதியின் துணைத் தலைவராகவும் பதவி ஏற்றார். 1966-1972 மாபெரும் பண்பாட்டுப் புரட்சியின் போது அவர் பாதிக்கப்பட்டு, "மே 7" ஊழியர் பள்ளிக்குச் சென்று உழைத்தார். 1972 முதல் 1982 வரை, சோவியத் யூனியனுக்கான சீனத் தூதரகத்தின் துணை நிலை தூதராகப் பொறுப்பு ஏற்றார். கினிக்கான சீனத் தூதராகப் பொறுப்பு ஏற்றார். சீன வெளிநாட்டமைச்சின் செய்தித்துறைப் பகுதியின் தலைவராகப் பதவி வகித்தார்.1988 முதல், சீன வெளிநாட்டமைச்சராகவும் கட்சி கமிட்டிச் செயலாளராகவும் அரசவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 1993 முதல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவுறுப்பினராகவும் அரசவையின் துணைத் தலைமையமைச்சராகவும் வெளிநாட்டமைச்சராகவும் பொறுப்பு ஏற்றுவருகின்றார்.
|