• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலைமை
  2013-01-21 14:55:01  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகம் 18ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 2012ஆம் ஆண்டு, சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 51 லட்சத்து 90 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. இது 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட 7.8 விழுக்காடு அதிகரித்தது. 2012ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7.9 விழுக்காடு அதிகரித்தது. இது, அதே ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இருந்ததை விட 0.5 விழுக்காடு அதிகரித்தது. நுகர்வு அதிகரிப்பு, பொருளாதார அதிகரிப்புக்கு பெரும் பங்காற்றியுள்ளது.

சீனத் தேசிய புள்ளிவிபர பணியகத்தின் தலைவர் மா ஜியன் டாங் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கடந்த ஆண்டு சீனப் பொருளாதாரம் கண்டுள்ள சாதனைகளைத் தொகுத்தார். அவர் கூறியதாவது:

"2012ஆம் ஆண்டில், சீனத் தேசியப் பொருளாதாரம் மந்தமாகவும் நிதானமாகவும் வளர்ந்து வந்தது. சமூக பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டது. பொருளாதார அதிகரிப்பும், வேலை நிலையும், விலைவாசியும் பொதுவாக நிதானமாக இருந்தன. வேளாண் துறையின் அடிப்படை மேலும் நிதானமாக மாறியது. பொருளாதாரக் கட்டமைப்புச் சரிப்படுத்தலில் புதிய முன்னேற்றம் காணப்பட்டது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தில் புதிய முன்னேற்றம் உருவானது. எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் புதிய பயன்கள் பெறப்பட்டன. பொது மக்களின் வாழ்க்கை தரமும் மேம்பட்டது" என்று அவர் கூறினார்.

முந்தைய பொருளாதார அதிகரிப்பு வேகத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 7.8 விழுக்காடு என்ற அதிகரிப்பு வேகம் ஒப்பீட்டளவில் தாழ்வாக இருக்கிற போதிலும், பொருளாதார காலக்கட்ட மாற்றத்தின் விதிகளுக்குப் பொருந்தியதாக இருக்கிறது. இது சீன பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்துக்கும், பொருளாதாரக் கட்டமைப்புச் சீர்படுத்தலுக்கும் சாதகமாக இருக்கிறது என்று மா ஜியன் டாங் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை அவர் முன்னாய்வு செய்தார். இவ்வாண்டு சர்வதேசப் பொருளாதார சூழல் இன்னும் சிக்கலாக இருக்கிறது. உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில், சமமற்ற, தொடர்ச்சியற்ற, ஒருங்கிணைப்பற்ற முரண்பாடுகள் இன்னும் நிலவுகிறன. ஆனால் பொருளாதாரத்தின் இடைக்கால மற்றும் நீண்டக்கால விரைவான அதிகரிப்பைத் தூண்டும் அடிப்படை மாறுவதில்லை. அறிவியல் ரீதியான பகுத்தாராய்வு மற்றும் கட்டுப்பாடு மேற்கொண்டால் தான், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு முதல் நிதானமாக அதிகரித்து வரும் போக்கினைச் சீனப் பொருளாதாரம் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040