சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் டோமஸ் பாக், ஆசிய ஒலிம்பிக் செயற்குழுத் தலைவர் அஹமேத் அல்-ஃபாஹத் அல்-அஹமத் அல்-சாபாஹ் ஆகியவோர் விளையாட்டுப் போட்டிக்கான துவக்க விழாவில் பங்கேற்றனர். துவக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகள், முப்பரிமாணம் உள்ளிட்ட உயர் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தியன்சின் மாநகரின் பண்பாடு, விளையாட்டுப் பாரம்பரியம் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுடன் ஆழ்ந்த தொடர்பை வெளிக்காட்டின.
12 நாட்கள் நீடிக்கும் இப்போட்டியில் 38 பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.