இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, சீன-இந்திய எல்லையிலுள்ள சிக்கிம் பகுதியைக் கடந்து சீன உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்தது தொடர்பாக சீனா நிலைப்பாட்டு ஆவணத்தை வெளியிட்டதற்கான காரணத்தைச் சீன வெளியுறவு அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் கங்சுவாங் புதன்கிழமை பெய்ஜிங்கில் விவரித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த பின், சீன தரப்பு தூதாண்மை வழிமுறை மூலம் இந்தியாவுக்கு பல முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய படை வீர்ர்கள் இன்னும் சட்ட விரோதமாக சீனாவின் உரிமை பிரதேசத்தில் தங்கி உள்ளனர். இந்த தவற்றைத் திருத்திக் கொள்ளும் வகையில் இந்தியா எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அதற்கு ஆதாரமற்ற பல்வகை சாக்குப்போக்குகளைச் சொல்லி வருகின்றது. ஏந்த ஒரு நாடும் இது போன்ற செயல்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்று கங்சுவாங் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் உண்மையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தி, சீனாவின் நிலைப்பாட்டைப் பன்முகங்களிலும் விளக்கம் செய்யும் வகையில், சீனா இவ்வாவணத்தை வெளியிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.