2017ஆம் ஆண்டு நேபாள மாணவர்களுக்கு சீன அரசின் உதவித்தொகை வழங்கும் விழா 26ஆம் நாள் அந்நாட்டிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது.
சீனத் தூதர் யூ ஹாங், நேபாள அனிகோ சங்கத்தின் தலைவர் டாம், காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் கன்பியூசியஸ் கழகத்தின் தலைவர் வாங் சேன்லீ ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
2016ஆம் ஆண்டு வரை, சீனாவில் கல்வி பயிலும் நேபாள மாணவர்களின் எண்ணிக்கை 5160 ஆகும். சீனாவில் பல பல்கலைக்கழகங்கள் நேபாள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகின்றன என்று தூதர் யூ ஹாங் கூறினார். இரு நாடுகளுக்கிடையிலான பண்பாடு மற்றும் கல்வித் துறை பரிமாற்றத்தைச் சீனா தொடர்ந்து முன்னேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். (வாணி)