• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்-குவாங்சோ அதிவிரைவு இருப்புப்பாதை
  2013-01-22 13:00:04  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங்கிலிருந்து ட்செஙக் ட்சோ நகர் வரை அதிவிரைவு இருப்புப் பாதை இயங்கத் தொடங்குவதுடன், பெய்ஜிங்-குவாங்சோ அதிவிரைவு இருப்புப் பாதையும் 26ஆம் நாள் முழுமையாக இயங்கத் துவங்கி, உலகளவில் மிக நீளமான அதிவிரைவு இருப்புப் பாதையாகியுள்ளது. இதுவரை சீனாவிலுள்ள அதிவிரைவு இருப்புப் பாதையின் மொத்த நீளம் 9300 கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது.

சீன இடைக்கால மற்றும் நீண்டகால இருப்புப்பாதை வலைப்பின்னல் திட்டங்களில் பெய்ஜிங்-குவாங்சோ அதிவிரைவு இருப்புப்பாதை, முக்கிய ஒன்றாகும். முழு நெறியின் திட்டமிட்ட வேகம், ஒரு மணிக்கு 350 கிலோமீட்டர். துவக்கக் காலச் செயல்பாட்டு வேகம், ஒரு மணிக்கு 300 கிலோமீட்டரை எட்டுகிறது.

சீன அதிவிரைவு இருப்புப்பாதைக் கட்டுமானத்தில் கிடைத்த புதிய சாதனைகளை, பெய்ஜிங்-குவாங்சோ அதிவிரைவு இருப்புப்பாதை நெறி முழுமையாகத் திறக்கப்படுவது காட்டியுள்ளது. இதனால், சீனாவின் இத்தகைய இருப்புப்பாதை போக்குவரத்து முறைமை, அடிப்படையில் தொடரமைப்பாக உருவாகிறது. பயண நேரத்தைச் சிக்கனப்படுத்தி, மக்களுக்கு அதிக வசதிகளை வழங்கி, பிரதேசப் பொருளாதார மற்றும் சமூக ஒன்றிணைப்பு வளர்ச்சியைத் தூண்டுவதுற்கு இது முக்கிய பங்காற்றுகிறது என்று சீன இருப்புப்பாதை அமைச்சின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் ட்சௌ லி தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040