மகிழ்ச்சியடைகின்ற குழந்தைகள், எதிர்காலத்தில் இலட்சாதிபதியாக விளங்க முடியும். நல்வாழ்வுக்கும், வருமானத்துக்குமிடை தொடர்பை ஆழமாக ஆய்வு செய்வது இதுவே முதல் முறை. ஆய்வு செய்யும்போது, 22 வயதான 5 இளைஞர்களின் வாழ்க்கை மீதான மனநிறைவு குறியீடு ஒரு விழுக்காடு அதிகரித்திருந்தால், ஆண்டுதோறும் அவர்களின் வருமானம் சுமார் ஈராயிரம் அதிகரித்துள்ளது என்றும் இவ்வாய்வு தெரிவித்தது.
இவ்வாய்வு, அறிவாளர்கள், கொள்கைகளை உருவாக்கியவர்கள், பொது மக்கள் ஆகியோரில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது, நல்வாழ்வுக்கும், வருமானத்துக்குமிடை தொடர்பை வெளிப்படுத்தி, மக்களின் நலன்களை உயர்த்த வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மகிழ்ச்சி, மக்களின் ஆர்வம் மட்டுமல்ல, பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு வாய்ந்தது என்று அவ்வாய்வு மேற்கொண்ட பேராசிரியர் Jan-Emmanuel De Neve தெரிவித்தார்.
குழந்தைகள் மகிழ்ச்சியடைவது, எதிர்காலத்தின் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், நல்ல உணர்வு வாய்ந்த குடும்பச் சுற்றுச்சூழலை உருவாக்குமாறு அவர் பெற்றோருக்கு வேண்டுக்கோள் விடுத்தார்
இவ்வாய்வு, 2012ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் வெளியான தேசிய அறிவியல் கழகத்தின் கல்வியியல் இதழில் இருந்தது.