ஏழைப்புலவன் தருமிக்கு உதவச் சென்று, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என்ற பாடலை எழுதிக்கொடுத்து, பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு என்று நக்கீரனோடு வாதிட்ட சிவபெருமானின் திருவிளையாடலை நாம் அறிவோம். நாசி என்ற உறுப்பு இருப்பதால், ஐம்புலன்களில் ஒன்றான நுகர்தல் அல்லது முகர்தல் இருக்கிறது. உடலுக்கும், உடலை மறைக்கும் ஆடைக்குமாகச் சேர்த்து நறுமணப் பொருட்களை மனிதர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அது மட்டுமா பூச்சிகள் ஆடைகளை நாசப்படுத்தாதிருக்க ரசகற்பூரத்தை துணியில் கட்டி பெட்டியில் வைக்கும் வழமை இன்னும் பல இடங்களில் இருக்கிறதல்லவா...இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம், நாம் கடந்த முறை பண்பாடு நிகழ்ச்சியில் அறிமுகத்தோடு விடைபெற்ற நறுமணப்பைகளை பற்றி மேலதிக தகவல்களை தரத்தான்.
1 2 3 4 5 6