• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:நறுமணப் பையும் தூரிகை தாங்கியும்
  2013-01-31 08:59:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சிலரது கூற்றுப்படி, இப்படி நறுமணப்பொருட்கள் தாங்கிய சுருக்குப்பையை தம்மோடு வைத்துக்கொள்ளும் வழமை, ஹான் இன மக்களுடையதாக தெரிகிறது. தாங் வம்சக்காலத்தில் இந்த வழமை இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள், சந்திரநாட்காட்டியின் 4வது திங்களில், அழகிய பட்டுத்துணி, பட்டுநூல் மற்றும் தங்கம், வெள்ளி மணிகள் கொண்டு அழகிய சுருக்குப்பைகளை தைத்தனர். ச்சிங் வம்சக்காலத்தில், டிராகன் படகு விழா மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையிலும் நறுமணப்பையை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். மன்ச்சு இனத்தோரிடையே இந்த வழக்கம் நீண்டகாலமாக இருந்திருந்தது. ச்சிங் வம்சக்கால வழமையின்படி, பேரரசர்கள், பேரரசிகள், ஆண்டில் எல்லா நாட்களும் தங்களோடு நறுமணப்பையை வைத்திருக்க வேண்டும். ஆண்டின் இறுதியில் அல்லது முக்கிய திருவிழா நாளில், பேரரச்ர் இளவரசர்கள், அமைச்சர்களுக்கு நறுமணப்பை பரிசாக வழங்குவார். இதையெல்லாம் விட, ஒரு சுவையான தகவல் உண்டு. பேரரசர் துங்ஷு, பேரரசர் குவாங்ஷியு இருவரும் தங்கள் பேரரசிகள், மஞ்சத்தை அலங்கரிக்கும் மாதுகளை தேர்ந்தெடுக்கும்போது, இந்த நறுமணப்பையை பயன்படுத்தினர். எப்படி என்கிறீர்களா? எல்லாம் திரைப்படத்தில் நாம் பார்த்தது போலதான், அந்தப்புரம் மகிழவரும் பேரரசர் அங்கே பெண்கள் அணிவகுத்து நின்றிருக்க, வரிசையாக பார்த்தபடி சென்று, எந்தப் பெண்ணை அவருக்கு பிடிக்குமோ, அவளது ஆடையில் நறுமணப்பையை வைத்துவிட்டு போவார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040