• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:நறுமணப் பையும் தூரிகை தாங்கியும்
  2013-01-31 08:59:48  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷியாங்பாவ், ஷியாங்நாங், ஷியாங்தாய் என்றெல்லாம் அழைப்படும் இந்த நறுமணப்பொருள் பையை, பொதுவாக சந்திர நாட்காட்டியின் 5வது திங்கள், 5ம் நாளில் வரும் டிராகன் படகு திருவிழாவின்போது மக்கள் கையில் கொண்டு செல்வர். இந்தச் சுருக்குப்பைக்குள் நறுமண மூலிகைகள் இருக்குமாம். இந்தச் சுருக்குப்பையின் வெளிப்புறத்தில் நச்சுவாய்ந்த தேள், பாம்பு, பூரான், பல்லி, தேரை ஆகிய ஐந்து விலங்குகளின் பூத்தையல் இருக்கும். பேய்களையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து, செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரவே இந்தப் பூத்தையல். அந்தக்காலத்தில், மக்கள் வேட்டையாடச் செல்லும்போது, இந்தச் சுருக்குப்பையில் சில மருந்து மூலிகைகளை கொண்டு செல்வார்களாம். நச்சான பூச்சிகளை விரட்டும் நறுமண மூலிகைகளும் இதில் அடக்கம். போரிடும் நாடுகள் காலத்தில், ச்சு நாட்டில் வாழ்ந்த பெருங்கவிஞர் மிலுவோ ஆற்றில் சந்திர நாட்காட்டியின் 5வது திங்கள், 5ம் நாளன்று தன்னை மூழ்கடித்து இறந்து போனார். அவர் மீது பற்றும், அன்பும், மதிப்பும் கொண்ட மக்கள் அவர் நினைவாக சுருக்குப்பைகள் தைத்து, அதில் அவருக்கு விருப்பமான நறுமணப்பொருட்களை வைத்துக்கொள்ளத் தொடங்கினார்களாம்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040