சொர்க்கக் கோயில்
சொர்க்கக் கோயில் அல்லது வானுலகக் கோயில் 1420ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டதாகும். கிபி 1368 முதல் 1644ம் ஆண்டு வரையான மிங் வம்ச அரசர்களும், 1644 முதல் 1911ம் ஆண்டு வரையான ச்சிங் வம்ச அரசர்களும் இந்த கோயிலை வானுலகுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கும் இடமாகவும், நல்ல விளைச்சலுக்காக இறை மன்றாடும் இடமாகவும் கருதினர்.