இந்த விந்தையான அம்சம் தாங்கள் வல்லமை பெற்றவர்கள், எனவே தங்களுக்கு கீழ்பணியாவிட்டால், கடவுளின் எதிரியாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது என மக்களை நம்பச்செய்ய உதவியது. ஆனால் உண்மையில் இதன் பின்னணியில் இப்படி பெரிய கடவுளின் கொடை எனறு சொல்லக்கூடிய விந்தையேதுமில்லை. அறிவியல் ரீதியான காரணங்களை ஆய்வு செய்தால், இந்த வானுலகக் கல்லின் இதயத்திற்கு அறையின் சுவர்களுக்குமிடையிலான அமைவால் பேசும்போது ஒலி, சுவர்களின் பட்டு எதிரொலிக்க, பேச்சொலியும், எதிரொலியும் சேர்ந்து கேட்க குரல் கணீரென்று இருந்தது. சுவர்களுக்கும் இந்த கல்லுக்குமிடை தூரம் மிகக் குறைவே என்பதால் உண்மை குரலொலியும் அதன் எதிரொலியும் தெளிவாக பிரித்தறியமுடியாமல் போக, இரு ஒலிகளும் இணைந்து, சன்னமான குரலும் கம்பீரமாக தொனிக்கும்படி செய்து விடுகின்றன. மக்களும் இதை கேட்டு, அடடே இதென்ன விந்தை, பேரரசர் உண்மையிலேயே கடவுள் அம்சம் கொண்டவர்தான் போல என்று எண்ணினர்.