பின்னாளில் இந்த எதிரொலி எழுப்பும் சுவர்களை பாதுகாக்க மற்றுமொரு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது. பின்னாளில் பேரளவுப் பயணிகளின் வருகை உள்ளிட்ட காரணங்களால் அந்த இரண்டாவது பாதுகாப்புச் சுவர் சீரழிந்தது.
இன்றைக்கு உள்ளே சென்று பார்க்கும் பயணிகள் இந்த எதிரொலி விந்தையை பெரிதும் அனுபவித்து கேட்க முடிவதில்லை, காரணம், அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் கூடும்போது, அவர்கள் எதிரொலியை எழுப்பும் சுவர்களை மறைந்து நின்றுவிடுவதுதான். ஆனால், தனியே எப்போதாவது கூட்டமில்லாத நேரத்தில் இந்த வானுலகக் கல்லின் இதயம் எனப்படும் கல்லை சுற்றிய வட்ட பலிபீடத்தின் அருகே நின்றபடி பேசினால், நம் குரலொலி சுவர்களில் பட்டு எதிரொலியாக எழும்பி, எதிரொலியும், நம் குரலொலியும் இணைந்து கம்பீரமாக ஒலிப்பதை கேட்பது, சுவையான அனுபவம் என்கிறார்கள்.