எதிரொலிச் சுவர்
சொர்க்கக் கோயிலினுள்ளே ஒரு விந்தையான இடமுண்டு. உள்ளே அமைந்துள்ள ஒரு வட்ட வடிவ பீடத்தின் நடுவே உள்ள கல், வானுலகக் கல்லின் இதயம் என்றழைக்கப்படுகிறது. இங்கிருந்தபடி அக்காலத்தில் பேரரசர்கள் உரை நிகழ்த்துவார்களாம். உரையென்றால், முக்கியமான நேரங்கள், விழாக்கள் போன்ற சிறப்பான, சடங்கு முறைப்படியான உரையாக அவை இருக்கும். அரச அதிகாரத்தின் அடையாளமாக, கம்பீரமான தோரணையில் பேரரசர் இப்படி உரை நிகழ்த்துகையில், அவர் பேசுவது சன்னமாக இருந்தாலும், கேட்போருக்கு கணீரென்று ஒலிக்கும் பேரரசரின் குரல் செவிகளை நிரப்புமாம். இதற்கு காரணம் இந்த இடத்தில் அமைந்த சுவரில் பட்டு தெறிக்கும் ஒலி, எதிரொலியாக மீண்டும் ஒலிக்க, கம்பீரமான குரல் மக்களுக்கு கேட்டது. இதை பேரரசர்கள் தாங்கள் தியன்ஸு அதாவது கடவுளின் மகன் என்பதை எண்பிக்கும் ஓர் ஆதாரமாக கூறினர்.