பாலத்தில் கீழுள்ள சுரங்கம் போன்ற ஊடுவழி ஷெங் வாயில் என்று அழைக்கப்பட்டது. இதன் வழியாகத்தான் பசுக்களும், ஆடுகளும் பலிகொடுப்பதற்காக வழிநடத்தி செல்லப்பட்டன. தான்பி பாலம் புனிதமானதாக கருதப்பட்டதால் விலங்குகள் இப்பாலத்தின் வழியே அனுமதிக்கப்படுவதில்லை, கீழேயுள்ள சுரங்கத்தின் வழியே அவை பலிகொடுக்கப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சுரங்கவழியை நரக வாயில் என்றும் அழைத்தார்கள், எனவே பொதுவாக இதனூடாக செல்ல மக்கள் துணிவதில்லை.