• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கதை:இளவரசி ஆன்போ
  2013-02-01 16:48:48  cri எழுத்தின் அளவு:  A A A   

என்ன இருந்தாலும், சொந்த ஊரையும், உறவையும் மறந்துவிடமுடியாது அல்லவா, ஆகவே பல சமயங்களில் தன் வளர்ப்பு மகளான இளவரசி ஆன்போவிடம், மலைகள், ஆறுகள் என்று பசுமையாக இருக்கும் புவியின் அழகை, ஆண்கள் உழுதும், பெண்கள் நெய்தும் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசுவாள். இதையெல்லாம் கேட்கும்போது இளவரசி ஆன்போவுக்கு மனிதர்கள் வாழும் பூவுலகுக்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழும். ஒருமுறை வளர்ப்புத்தாய் புவியின் பெருமையைப் பற்றி பேசுவதைக் கேட்ட இளவரசி ஆன்போ, எப்படி அவளுக்கு இதெல்லாம் தெரியும் என்று கேட்க, தான் அங்கிருந்து வந்தவள் என்றும் இளவரசியின் தந்தையான டிராகன் மன்னன் தன்னை கடத்திக்கொண்டு வந்த கதையையும் கூறினாள். அவளுக்கு புவியில் உறவுகள் உண்டா என்று இளவரசி கேட்க, தனக்கு கணவனும், தங்கக்காளை என்ற மகனும் இருப்பதை கூறி, தன் மகனுக்கு வலது காதில் ஒரு மச்சம் இருக்கும் என்று கூறி, அவனுக்கு இப்போது இளவரசியின் வயது இருக்கும் என்றும் கூறினாள். இதைக்கேட்ட இளவரசி வருத்தமடைந்தாள். செவிலித்தாயாக தன்னை கவனித்துக்கொண்ட அப்பெண்ணிடம் தான் வளர்ந்ததும், அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவளது மருமகளாகி தன் நன்றியை தெரிவிக்க விரும்புவதாக உறுதிகூறினாள்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040