
பொன் நாகப்பாம்பு எனும் பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சி பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் தாய்லாந்தில் துவங்கியது.
ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் நடைபெறும் மிக பெரிய அளவுடைய பன்னாட்டுக் கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும். அமெரிக்கா முக்கியமாக அதனை ஏற்பாடு செய்துள்ளது. பிரதேசத்தில் நிகழும் திடீர் நிகழ்ச்சிகளைச் சமாளிக்க பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு ஆற்றலுக்குப் பயிற்சி அளிப்பது இப்பயிற்சியின் இலக்காகும் என்று அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியது.
இப்பயிற்சி மூலம் தாய்லாந்துடன் பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் ஒத்துழைத்து ஆசியான் அமைப்பை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக சீன இராணுவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இப்பயிற்சி 11 நாட்கள் நீடிக்கும். அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரத்துக்கு மேலான போர் வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். மனித வளப் பயிற்சி, பயங்கரவாத எதிர்ப்பு, மனிதநேய உதவித் திட்டம், ஆணைப் பயிற்சி முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.




அனுப்புதல்