இந்தியாவின் ஒளிவீசும் வரலாறு, சகிப்புத் தன்மை வாய்ந்த பண்பாடு, நாளோடு மேனியும் பொழுதொரு வண்ணமுமான வளர்ச்சி ஆகியவை பாராட்டப்படத்தக்கது. சீன-இந்திய உறவை மேலும் முன்னேற்றி, இரு நாட்டு மக்களின் மனங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைந்து, கீழை பண்பாட்டின் புதிய சாதனைகளைக் கூட்டாக உருவாக்குவது, தனது பதவிக்காலத்தில் நிறைவேற்ற இருக்கும் கடமையாகும் என்று அந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்தார்.
சீன-இந்திய உறவுக்கு ஒளிவீசும் எதிர்காலம் உள்ளது. இரு நாடுகளும் ஒத்துழைப்புக் கூட்டாளியே அன்றி, ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அல்ல. கூட்டு நோக்கத்தை நோக்கி இணைந்து முயற்சிகளை மேற்கொண்டால், எல்லா இன்னல்களையும் சமாளிக்க முடியும் என்றும் கூறினார்.