• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசவையின் சீர்திருத்தம்
  2013-03-01 09:49:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் மத்திய கமிட்டித் தலைமை அமைப்புகளின் முழு அமர்வின் கூட்டறிக்கையை 28ஆம் நாள் வெளியிட்டது. சீன அரசவை அமைப்புகளின் சீர்திருத்தம் மற்றும் கடப்பாட்டை மாற்றியமைப்பது பற்றிய திட்டம், முழு அமர்வில் நிறைவேற்றப்பட்டது என்று இக்கூட்டறிக்கை தெரிவித்தது. மக்களே முதன்மை, மக்களுக்காக ஆட்சி புரிவது ஆகிய கண்ணோட்டங்களை சீன அரசவை கடைபிடிக்க வேண்டும். சேவை புரிவதன் மூலம் நிர்வாகம் செய்ய வேண்டும். நிர்வாகத்திலே சேவையை நனவாக்க வேண்டும் என்று கூட்டறிக்கை சுட்டிக்காட்டியது.

 

அரசின் கடப்பாட்டை மாற்றியமைப்பது அமைப்புகளுக்குள் உறவையும் செயல்பாட்டு முறைமையும் ஒழுங்குப்படுத்துவது ஆகியவை, இச்சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், அதிகாரத்தை ஒழுங்குப்படுத்தி, மக்களுக்குச் சேவை புரிவது என்ற அரசின் செயல்திறன் நனவாக்கப்படும்.

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18வது மத்திய கமிட்டியின் 2வது முழு அமர்வின் கூட்டறிக்கையின்படி, செயல்திறனை மாற்றியமைப்பதை மையமாகக் கொண்டு, அமைப்புகளைக் குறைத்து, அமைப்புகளின் சீர்திருத்தத்தை முன்னேற்ற வேண்டும். இத்தகைய முறைமைகளை முழுமைப்படுத்தி, பயனை உயர்த்தி, வாரிய ஒருங்கிணைப்பு முறைமையின் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 1982ஆம் ஆண்டுக்குப் பின் சீன அரசு மேற்கொண்ட 7வது அமைப்பு அடிப்படையிலான சீர்திருத்தம் இதுவாகும்.

 

நடைபெறவுள்ள வாரிய ஒருங்கிணைப்பு சீர்திருத்த வகை, பல்வேறு வாரியங்களிடை அதிகார அடுக்கு நிலையை நீக்கும். தேசிய நிர்வாக கழகத்தின் பேராசிரியர் ச்சு லிஜிய கூறியதாவது

 

2008ஆம் ஆண்டு நடைபெற்ற சீர்திருத்தம் அதிக சாதனைகளைப் பெற்றதோடு, அதிக பிரச்சினைகளையும் விட்டுச் சென்றது. இப்போதைய சீர்திருத்தம், இப்பிரச்சினைகளை நீக்கி, மக்களுக்கு சேவைபுரியும் அரசை உருவாக்க வேண்டும். சந்தையைக் கண்காணித்து, சமூகத்தை நிர்வகித்து மக்களுக்கு சேவை புரிவதென்ற ஓர் அரசை உருவாக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

அரசு வாரியங்களின் செயல்பாடுகளும். அரசின் அதிகாரமும் தெளிவாக வகுக்கப்படும். அரசின் பொறுப்பு, சந்தையின் பொறுப்பு, சமூகத்தின் பொறுப்பு ஆகியவை தெளிவாக ஒழுங்குப்படுத்தப்படும். ச்சு லிஜிய கூறியதாவது

 

சீனா, நவீன சமூகத்தில் நுழைந்து, சமூக வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால், மத்திய அரசு, உள்ளூர் அரசுகளுக்கு கூடுதலான அதிகாரத்தை வழங்க வேண்டும். சமூக அமைப்புகளின் சக்தியை வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

தவிரவும், பல்வேறு வாரியங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பட வேண்டும். அவற்றின் பொறுப்புகளை தெளிவுப்படுத்திடு, அவற்றின் செயல்பாடுகளைப் பனுள்ளதாக கண்காணித்து, சீர்கேடுகளை தவிர்ப்பது மிக முக்கியமானது என்றும் ச்சு லிஜிய தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040