சீன அரசவையின் சார்பில், கடந்த ஐந்தாண்டுகளில் நடப்பு அரசின் பணிகள் பற்றி தலைமையமைச்சர் வென் ச்சியா பாவ் இக்கூட்டத் தொடரிடரில் அறிக்கை வழங்கினார். கடந்த 5 ஆண்டுகள் சீனாவின் வளர்ச்சிப் போக்கில் மிகவும் வேறுபட்ட 5 ஆண்டுகளாகும். உலக நிதி நெருக்கடியின் பாதிப்பைச் சீன அரசு பயனுள்ள முறையில் சமாளித்ததால், பொருளாதாரம் விரைவாக வளர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கை நிலையும் சமூகக் காப்புறுதி நிலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன என்று வென் ச்சியா பாவ் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஈட்டியுள்ள சாதனைகளை உறுதிப்படுத்தும் போது, சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியிலுள்ள சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாண்டு சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய குறிக்கோள்களை வென் ச்சியா பாவ் இப்பணியறிக்கையில் முன்வைத்துள்ளார். மேலும் இவ்வாண்டில் அரசின் பணிகள் தொடர்பான முன்மொழிவுகளையும் அவர் வழங்கினார்.